AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் ஓவர்!

Manjanathi First Schedule: தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்தில் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவரும் திரைப்படம்தான் மஞ்சணத்தி. இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், முதல்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார்.

மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங் ஓவர்!
மஞ்சணத்தி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Oct 2026 13:40 PM IST

கோலிவுட் சினிமாவில் தனது திரைக்கதைகள் மூலம் அரசியல், மக்கள் பாகுபாடு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து வெளிப்படையாக சொன்னவர்தான் மாரி செல்வராஜ் (Director Mari Selvaraj). இவரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை மொத்தமாக 5 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. 2018ம் ஆண்டில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ (Pariyerum Perumal) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்து, பல படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பைசன் (Bison). இதில் நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கிவரும் திரைப்படம்தான் மஞ்சணத்தி (Manjanathi Movie).

இதில் பிரியங்கா மோகன், கயாடு லோஹர், கதிர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியிருந்த நிலையில், முதல்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் பார்க்கவிரும்பவில்லை… பிரபலங்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளாதது குறித்து இளையராஜா விளக்கம்!

மஞ்சணத்தி திரைப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் நிறைவு குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் இயக்குநர் மாரி செல்வராஜ், “மஞ்சணத்தி படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அவர்களின் அற்புதமான நாட்களையும் மறக்க முடியாத அனுபவங்களையும் சாத்தியமாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மஞ்சணத்தி திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:

இந்த மஞ்சணத்தி படத்தை மாரி செல்வராஜ் இயக்க, தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அவரே தயாரித்துவருகிறார். இந்த படத்தில் கயாடு லோஹர், கதிர், பிரியங்கா மோகன், விது, பூர்ணிமா மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துவருகிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துவரும் நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டுவருகிறதாம்.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷின் குரலில்.. துல்கர் சல்மானின் ஏஒடி படத்திலிருந்து ‘ராதே ராதே’ பாடல் வெளியீடு!

இந்த படம் பெண்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் நிலையத்தில், சிறப்பாக இருக்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்திருக்கும் நிலையில், இன்னும் 2 கட்ட ஷூட்டிங் இருக்கிறது. அந்த விதத்தில் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் இந்த திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us