AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Manjanathi: நான் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து வித்தியாசம்.. மஞ்சணத்தி படம் குறித்து மாரி செல்வராஜ் சுவாரஸ்ய தகவல்!

Manjanathi Movie Story: தமிழில் அரசியல் மற்றும் கிராமப்புற கதைகளை மையமாக கொண்ட திரைப்படங்களை இயக்கி வெற்றிபெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்தில் புதிதாக தயாராகவுள்ள படம்தான் மஞ்சணத்தி. இப்படம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Manjanathi: நான் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து வித்தியாசம்.. மஞ்சணத்தி படம் குறித்து மாரி செல்வராஜ் சுவாரஸ்ய தகவல்!
மஞ்சணத்தி படத்தின் கதை பற்றி மாரி செல்வராஜ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Jun 2026 14:56 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) தமிழ் சினிமாவிலும் சரி, தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார். தமிழ் சினிமாவில் தென் மாவட்டங்கள் மற்றும் கிராமப்புற கதைகளை படமாக இயக்கி மக்களிடையே கொண்டு சேர்த்தவர் இவர். இவரின் இயக்கத்தில் இதுவரை மொத்தமாக 5 படங்கள் வெளியாகியுள்ளது. வெளியாகியிருந்த இந்த 5 படங்களும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் 6-வது உருவாகவுள்ள திரைப்படம்தான் மஞ்சணத்தி (Manjanathi). இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க, அவரின் மனைவி திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இசையமைக்கும் நிலையில், சிறப்பாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன் (Priyanka Mohan), கதிர் (Kathir) மற்றும் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) போன்ற பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதைக்களம் எதை பற்றி இருக்கும் என்பது பற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங்கின்போது அது சவாலாக இருந்தது – கியாரா அத்வானி!

மஞ்சணத்தி திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்த விஷயம்:

சமீபத்தில் பேசிய மாரி செல்வராஜ், “நான் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும், எங்கள் கிராமத்து ஆண்களை மையமாகக் கொண்டிருந்தன, இதையடுத்து அங்குள்ள பெண்களின் கதைகளைப் பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன். அந்த எண்ணம் அவர்களைப் பற்றி ஒரு படம் எடுக்க என்னைத் தூண்டியது.

இதையும் படிங்க: தொடங்கியது அபிஷன் – சிவராஜ்குமார் பட ஷூட்டிங்… வைரலாகும் போட்டோ

என் திரைக்கதைகள் பொதுவாக எனக்குள் இருக்கும் கோபம் மற்றும் அரசியலில் இருந்துதான் உருவாகின்றன. பல ஆண்டுகளாக நான் கேட்ட இளையராஜாவின் எண்ணற்ற பாடல்களால் ஈர்க்கப்பட்டு ஒரு கதையை எழுதியுள்ளேன். இப்படம் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்ட படமாக இருக்கும்” என அதில் அவர் கூறியுள்ளார்.

மஞ்சணத்தி திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதில் நடிகர்கள் பிரியங்கா மோகன், கயாடு லோஹர் மற்றும் கதிர் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே நடிகர் கதிர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாரி செல்வராஜிற்கு முதல் படமாக இருந்த நிலையில், பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us