தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி, விஜயின் புகைப்படம் மற்றும் ‘ஜனநாயகன்’ படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட பிரத்யேக டிஷர்ட்டுகளுக்கு தமிழகம் முழுவதும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.