கவின் – நயன்தாராவின் ஹாய் படத்திலிருந்து வெளியானது ரசகுல்லா வீடியோ பாடல்
Rasagulla Video Song From Hi Movie Out Now | தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கவின். இவர் நாயகனாக நடித்து தற்போது உருவாகி உள்ள ஹாய் படத்தில் இருந்து பாடல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து தற்போது வெள்ளித்திரையில் ரசிகர்களிடையே தொடர்ந்துவ் அரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகர் கவின். இவர் சின்னத்திரையில் சீரியல் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றப்போது தமிழக மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளித்திரையில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் இறுதியகா கடந்த 2025-ம் ஆண்டில் அடுத்தடுத்து கிஸ் மற்றும் மாஸ்க் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இரண்டும் வெவ்வேறு ஜானர்களில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கவின் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன்படி நடிகர் கவின் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து ஹார் மற்றும் கவின் 9 மற்றும் கவின் 10 ஆகியப் படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் ஹாய் படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




ஹாய் படத்திலிருந்து வெளியானது ரசகுல்லா வீடியோ பாடல்:
இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி உள்ள இந்த ஹாய் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்து உள்ள நிலையில் படத்தில் இருந்து தற்போது ரசகுல்லா என்ற வீடியோ பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read…
நடிகர் கவின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Special delivery: “Rasagulla” 🙂 #Hi from Aug 14
▶️ https://t.co/WMZFmEZ3CQ#Nayanthara @VishnuEdavan1 @jenmartinmusic @ZeeStudios_ @Rowdy_Pictures @7screenstudio @SonyMusicSouth @proyuvraaj pic.twitter.com/KQFg8OogCh
— Kavin (@Kavin_m_0431) July 22, 2026