AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படத்தில் வில்லனாக பாபி தியோலை நடிக்க வைக்க என்ன காரணம்? இயக்குநர் ஓபன் டாக்

Why BobbyDeol was chosen for the negative role in Jana Nayagan movie | ஜன நாயகன் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடிகர் பாபி தியோலை தேர்வு செய்ய என்ன காரணம் என்று இயக்குநர் எச் வினோத் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஜன நாயகன் படத்தில் வில்லனாக பாபி தியோலை நடிக்க வைக்க என்ன காரணம்? இயக்குநர் ஓபன் டாக்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jul 2026 10:58 AM IST

தமிழ் சினிவில் நாளை மிகவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி உள்ள இந்த ஜன நாயகன் படம் அவரது நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச் வினோத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த ஜன நாயகன் படம் நாளை 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தை தென்னிந்திய சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான வலம் வரும் கேவிஎன் புரடெக்‌ஷன்ஸ் தயாரித்து உள்ளது.

படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் எச். வினோத் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ஜன நாயகன் படத்தில் வில்லனாக நடிகர் பாபி தியோல் தேர்வாக என்ன காரணம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

வில்லனாக பாபி தியோலை நடிக்க வைக்க என்ன காரணம்?

தமிழ் நடிகர்களிடையே வில்லன் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், பாபி தியோல் தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் எஸ்.ஜே. சூர்யா மட்டுமே ஒரு முக்கிய தேர்வாக இருந்தார். ஆனால் அவரால் எத்தனை படங்களில் வில்லனாக நடிக்க முடியும்? சத்யராஜ் சார் பிற மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். அதனால்தான் நான் வட இந்தியாவை நாடினேன். அங்குள்ள சினிமா உலகம் மாறியுள்ளது. தற்போது தெலுங்குப் படங்களே அங்குள்ள சந்தையை ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்குள்ள நடிகர்கள் பெரிய படங்களில் நடிக்க விரும்பினாலும், பல பெரிய படங்களைத் தாங்கும் அளவுக்குச் சந்தை வசதி இல்லாததால், அங்கு நடிக்கக் காத்திருக்கும் நடிகர்கள் பலர் உள்ளனர் என்று எச் வினோத் தெரிவித்துள்ளார்.

Also Read… கட்டா குஸ்தி 2 படம் இதுவரை வசூலித்தது எவ்வளவு? அப்டேட் வெளியிட்ட படக்குழு

இணையத்தில் வைரலாகும் எச் வினோத் பேச்சு:

Also Read… அமரன் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி – வாழ்த்து தெரிவித்த சாய் பல்லவி!

Follow Us