AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: இன்னும் 3 நாட்களில்… புது போஸ்டரை வெளியிட்ட ஜன நாயகன் படக்குழு!

Jana Nayagan Movie Poster: கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் ஜன நாயகன். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு இப்படம் வெளியாக காத்திருக்கிறது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ள நிலையில், படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Jana Nayagan: இன்னும் 3 நாட்களில்… புது போஸ்டரை வெளியிட்ட ஜன நாயகன் படக்குழு!
ஜன நாயகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jul 2026 14:53 PM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருந்துவந்தவர் விஜய் (CM Vijay). இவர் முழுவதுமாக அரசியலில் இறங்கி, தற்போது தமிழக முதலமைச்சராக தனது அரசியல் பணிகளை ஆற்றிவருகிறார். இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியாகியிருந்த படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் தென்னிந்திய இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ( Rockstar Anirudh) இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து இவரின் இசையமைப்பில் கிட்டத்தட்ட 5 பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் மற்றும் அரசியல்வாதியாகவும் நடித்துள்ள்ளார்.

கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலே இது வெளியாகவேண்டிய நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கு சென்சார் எல்லாம் கிடைத்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில், இன்று ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: 72-வது தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் – நடிகர் சூர்யா

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் பதிவு:

ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைக்கும் ஜன நாயகன் :

இயக்குநர் எச் வினோத்தின் இயக்கத்தில், தளபதி விஜய் கடைசியாக நடித்திருந்த திரைப்படம்தான் ஜன நாயகன். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, நரேன், பிரியாமணி மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளார்கள். இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் தமிழகத்தில், கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 19ம் தேதியில் தொடங்கியிருந்தது. ஏற்கனவே கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இதன் ப்ரீ புக்கிங் தொடங்கியது.

இதையும் படிங்க: தென்னிந்திய சினிமாவில் புது சாதனைப் படைத்தது யூத் பட பாடல் – வைரலாகும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் போஸ்ட்

கர்காநாடகவில் கிட்டத்தட்ட 3 கோடிகளுக்கு மேல் வசூல் மற்றும் கேரளாவில் தொடங்கிய முதல் நாளில் 2 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. தமிழகத்தில் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலே சுமார் ரூ 5 கோடிகளுக்கு மேல் டிக்கெட் புக்கிங்கில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது இதன் ப்ரீ புக்கிங் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் அதிகம் வசூல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Follow Us