AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் – நடிகர் சூர்யா

Actor Suriya Congratulates 72nd National Film Award winners | இந்திய சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய சினிமா விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் விருது வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

72-வது தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் – நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Jul 2026 13:47 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இந்தப் படம் தொடர்பான அட்டேட்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 47 மற்றும் சூர்யா 48 படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

72-வது தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்:

அதன்படி நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, 72-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எனது மூத்த கலைஞர்கள் மற்றும் நண்பர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்து விளங்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இந்தியத் திரைப்பட உலகை வளம் சேர்க்கின்றன என்று எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.

மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அதே 2024-ம் ஆண்டு கங்குவா படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படத்தின் சில தொழில்நுட்ப கோளாரு காரணமாக படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. மேலும் படம் வெற்றிப் பெற்று இருந்தால் இது நிச்சயமாக தேசிய விருதை வென்று இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read… 72வது தேசிய திரைப்பட விருதுகள் 2026: சிறந்த திரைப்பட விமர்சகருக்கான விருதைப் பெறும் டிவி9 விமர்சகர்

நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Soori: மண்டாடியும் வருவான்.. சூரியின் மண்டாடி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

Follow Us