சூர்யா 47 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… வைரலாகும் தகவல்!
Suriya 47 Movie Update | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 47-வது படமாக உருவாகி வரும் படத்தில் அவரது கதாப்பாத்திரம் என்ன என்பது குறித்து தகவல்கள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வரும் இவர் இந்த 2026-ம் ஆண்டில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் முன்னதாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 47 படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




சூர்யா 47 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்:
சூர்யா இதில் எப்போதும் கூச்சலும் கலகலப்பும் நிறைந்த, தன்னைப்பற்றித் தானே பெருமையாகப் பேசிக்கொள்ளும் மற்றும் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஒரு ஜாலியான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இறுதியில் அவர் ஒரு தீவிரமான வழக்கை எதிர்கொள்கிறார். இப்படத்தின் தலைப்பு அவரது கதாபாத்திரத்தோடு தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது கதாபாத்திரத்தில் ஒரு சுவாரஸ்யமான ‘மாஸ்’ (mass) மாற்றமும் இடம்பெறவுள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… சன் டிவியில் விரைவில் நிறைவடையும் பிரபல சீரியல்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya47 BUZZ – #Suriya plays a fun-cop who constantly creates a “scene,” over boast’s about himself as a cop and doesn’t take things too seriously who eventually takes on a serious case, and the movie’s title is said to be related to his character. There will also be an… pic.twitter.com/LacCZ9i2cA
— Movies Singapore (@MoviesSingapore) July 16, 2026
Also Read… Kishan Das: கிஷன் தாஸ் – சஞ்சனாவின் ‘சீ யூ’ பட ஃபர்ஸ்ட் சைட் வீடியோ வெளியானது!