AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா48 பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? – வைரலாகும் தகவல்!

Suriya48 Shooting Update : தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் சூர்யா. இவரின் நடிப்பில் உருவாக்கவுள்ள 48வது படத்தை, ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா48 பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? – வைரலாகும் தகவல்!
சூர்யா48 படப்பிடிப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jul 2026 21:23 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நாடகனாக இருந்துவருபவர் நடிகர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு (Karuppu). இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் உருவான இப்படத்தை, எஸ்.ஆர். பிரபு (SR Prabhu) தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 2026ம் ஆண்டு மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்த நிலையில், ரூ 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்திருந்தது. இந்த படத்திற்கு பின் இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா47 (Suriya47) போன்ற படங்களில் நடித்துவந்தார்.

இதில் சூர்யா47 படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்திற் எட்டிய நிலையில், அதை தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் (Gnanavel) இயக்கத்தில் சூர்யா48 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது தொடர்பான தகவல்கள் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அருண் பிரபு இயக்கும் தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார் – வைரலாகும் தகவல்

சூர்யா48 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடக்கம்:

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா இணைந்துள்ள புது படம் தற்காலிகமாக சூர்யா48 என அழைக்கப்பட்டுவருகிறது. இதை காந்தாரா, கேஜிஎஃப் போன்ற படங்களை தயாரித்திருந்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் (Hombale Films) நிறுவனம் தயாரித்துவருகிறது. இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருடன் நடிகை கயாடு லோஹரும் நடிக்கிறார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட FDFS காட்சிகள் எப்போது? முழு விவரங்கள் இதோ!

இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்றிருந்தது. அந்த விதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 22ம் தேதியில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

சூர்யாவின் 48வது திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்து வைரலாகும் பதிவு:

சூர்யாவின் 48வது படத்திற்கு கருப்பு பட இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இப்படமானது உண்மையான கதைக்களத்தில் உருவாகுவதாக கூறப்படுகிறது. ஐந்து ரூபாய் டாக்டரின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை 22ம் தேதியில் தொடங்கி கிட்டதட்ட 4 மாதத்தில் முடிப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா கூட்டணியில் வெளியான ஜெய் பீம் படத்தை போலவே, சூர்யா48 படமும் நிச்சயம் மாபெரும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us