Jana Nayagan: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட FDFS காட்சிகள் எப்போது? முழு விவரங்கள் இதோ!
Jana Nayagan FDFS Show: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருந்துவந்தவர் விஜய். இவர் தற்போது தமிழக முதல்வராக பணியாற்றிவரும் நிலையில், அவர் சினிமாவில் கடைசியாக நடித்த படம் ஜன நாயகன். இப்படத்தின் FDFS மற்றும் நேர விவரங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
2026ம் ஆண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமாவே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) நடித்திருந்த நிலையில், அவருடன் பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju) மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளார்கள். இதை இயக்குநர் எச் வினோத் (H Vinoth) இயக்க, வெங்கட் கே நாராயணா கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். இப்படமானது தெலுங்கு திரைப்படமான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் கதைக்களத்தினுள் உருவாக்கப்பட்டிருந்தாலும், முழுமையாக இல்லாமல் சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இப்படம் சென்சார் பிரச்சனையின் காரணமாக கடந்த 7 மாதங்களாக பெரும் சிக்கல்களை சந்தித்த நிலையில், தற்போது ஒருவழியாக படத்திற்கு சென்சார் கிடைத்துள்ளது. அந்த விதத்தில் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் இப்படம் உலகளவில் வெளியாகவுள்ளது.




இதையும் படிங்க: என் நண்பன் ஒரு பைத்தியம்… தயன் ஸ்ரீனிவாசன் பேச்சிற்காக முதலமைச்சர் விஜயிடம் மன்னிப்பு கோரிய அஜு வர்கீஸ்
ஜன நாயகன் படத்தின் FDFS விவரங்கள் :
இந்த ஜன நாயகன் திரைப்படமானது இந்திய நிலவரப்படி வெளிநாடுகளில் காலை 8:30 மணியளவில் வெளியாகிறதாம். மேலும் பெங்களூருவில் இப்படம் காலை 6 மணி காட்சிகள் முதல் ஜன நாயகன் திரைப்படமானது திரையிடப்படுகிறதாம். இப்படமானது மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரபாஸின் ஃபௌஸி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? அட இந்த தேதியிலா?
பெங்களூருவில் ஜன நாயகன் பட FDFS டிக்கெட்டின் விலை ரூ 800 என கூறப்படும் நிலையில், ரசிகர்கள் பெரும் அவதியில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் வழக்கம்போலவே மற்ற திரைப்படங்களை மாதிரி, காலை 9 மணி காட்சிகள் முதல் திரையிடப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் இது குறித்து அரசு எந்த அனுமதியும் இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் படத்தின் FDFS குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
#JanaNayagan FDFS to begin at 6:00 AM IST / 8:30 AM SGT worldwide. 🌍
Expect PEAK INSANE DEMAND for the FDFS tickets 🎟️, for the 1 final cinematic farewell to #ThalapathyVijay to The Honourable Chief Minister of Tamil Nadu, #CMVijay. pic.twitter.com/Uhqp1rXL0b
— Movies Singapore (@MoviesSingapore) July 16, 2026
அனிருத்தின் இசையமைப்பில் ஜன நாயகன் படம் தயாராகியுள்ள நிலையில், இதுவரை 4 பாடல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இப்படத்திலில் சில பாடல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற நிலையில், அதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் ஏற்கனவே இணையத்தில் லீக்காகியிருந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இந்த படம் கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.