Fauzi: பிரபாஸின் ஃபௌஸி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? அட இந்த தேதியிலா?
Prabhas Fauzi Release Date: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக நடித்து அசத்திவருபவர் நடிகர் பிரபாஸ். இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில், இவர் நடித்துவரும் பிரம்மாண்ட படம்தான் ஃபௌஸி. இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
டோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட நாயகனாக அனைவராலும் ரசிக்கப்பட்டுவருபவர் நடிகர் பிரபாஸ் (Prabhas). கிட்டத்தட்ட சினிமாவில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் இவர், தற்போதுவரையில் படங்களில் லீட் நாயகனாகவே நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் பான் இந்திய படமாக இறுதியாக தி ராஜா சாப் (The Raja Saab) என்ற படமானது வெளியாகியிருந்தது. இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை என கூறலாம். இதையடுத்து சீதா ராமம் படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடியின் (Hanu Raghavapudi) இயக்கத்தில், அவர் நடித்துவந்த புது படம்தான் ஃபௌஸி (Fauzi). இதில் பிரபாஸ், மிலிட்டரி ஸ்பையாக நடித்துவருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டிலே தொடங்கிய நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். அந்த இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்துவரும் நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் டிசி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் குழு
பிரபாஸின் ஃபௌஸி படத்தின் ரிலீஸ்:
நடிகர் பிரபாஸின் இந்த ஃபௌஸி படமானது 1990-களில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இதில் பிரபாஸுடன் நடிகர்கள் மிதுன் சக்கரவொர்த்தி, ஜெயா பிராடா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை இமான்வி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திரையரங்குகளில் வெற்றிநடை போடும் இதயம் முரளி படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
இந்த மாபெரும் கூட்டணியில் உருவான இப்படம் வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியில் வெளியாகவுள்ளதாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துவருகிறார். இவர் சீதா ராமம், குற்றம் 23 மற்றும் ஹோ மணப்பெண்ணே போன்ற படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸின் ஃபௌஸி திரைப்பட ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
अज्ञातपर्व ENDS.
THE REBELLION BEGINS 🔥#Fauzi GRAND RELEASE WORLDWIDE ON 3rd DECEMBER 2026 ❤️🔥#FauziOnDec3Rebel Star #Prabhas#Imanvi @hanurpudi #MithunChakraborty #JayaPrada @AnupamPKher @Composer_Vishal @sudeepdop @kk_lyricist @MrSheetalsharma @rckamalakannan… pic.twitter.com/IUQaZLPb2Y
— Fauzi (@FauziTheMovie) July 16, 2026
பிரபாஸின் ஃபௌஸி 2026ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக மற்றும் பான் இந்திய படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில் இப்படம் வெளியாகும் அதே மாதத்தில், பல பான் இந்திய படங்கள் வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. அல்லு அர்ஜுனை புஷ்பா 2 படம் மற்றும் ரன்வீர் சிங்கின் துரந்தர் 1 போன்ற படங்களும் டிசம்பர் மாதத்தில் வெளியாகி வெற்றியை பெற்றப் படங்களாக இருக்கிறது.