AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லோகேஷ் கனகராஜின் டிசி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் குழு

Lokesh Kanagaraj DC movie censor update | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்த லோகேஷ் கனகராஜ் தற்போது நாயகனாக அறிமுகம் ஆகி உள்ள படம் டிசி. இந்தப் படத்தின் சென்சார் அப்டேட் தற்போது படக்குழு வெளியிட்டு உள்ளது.

லோகேஷ் கனகராஜின் டிசி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் குழு
டிசி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jul 2026 13:06 PM IST

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படம் மாநகரம். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் அனைத்தும் வரிசையாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக உள்ள நடிகர்கள் கார்த்தி, கமல் ஹாசன், விஜய், ரஜினிகாந்த் மற்றும் சூர்யா என பலர் இவரது இயக்கத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இயக்குநராக தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களில் அவ்வபோது கேமியோ செய்த லோகேஷ் கனகராஜ் படத்தில் நாயகனாக நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிசி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் குழு:

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ள இந்த டிசி படத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து உள்ளார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. மேலும் இந்த டிசி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து ஹேங்கோவ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. படம் வருகின்ற 7-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் சென்சார் அப்டேட் வெளியாக்கி உள்ளது. அதன்படி படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… நடிகர் சூர்யா உடன் இணையும் பிரபல இயக்குநர்? வைரலாகும் தகவல்

டிசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பில் வந்த கார்க்கி படம் 4 ஆண்டுகளைக் கடந்தது – படக்குழு வெளியிட்ட பதிவு!

Follow Us