Lokesh Kanagaraj : கூலியில் ரஜினியின் டப் பண்ணலையா? அது AI- வாய்ஸா ? – லோகேஷ் கனகராஜ் உடைத்த உண்மை!
Lokesh Kanagaraj About AI In Coolie Movie : தமிழ் சினிமாவில் கடந்த 2025, ஆகஸ்ட் மாதத்தில் வெளியான பிரம்மாண்ட படம் கூலி. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்க, ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் சில காட்சிகளுக்கு ஏஐ குரலை பயன்படுத்தியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் கடந்த 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் வெளியான திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்தார். கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன், பான் இந்திய நடிகர்களின் நாகார்ஜுனா (Nagarjuna), ஆமிர்கான் (Aamir Khna), உபேந்திரா, சவுபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன், கடத்தல் மற்றும் மாறுபட்ட கதையில் வெளியாகியிருந்தது. ரஜினிகாந்தின் 171வது படமான கூலியை , சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார்.
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் இளமை பருவ காட்சிகளும் சில இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், அந்த காட்சியில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது குறித்து, இயக்குநர் லோகேஷ் கனராஜ் ஓபனாக பேசியுள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் இணையும் நடிகர் சூரி? வைரலாகும் தகவல்
கூலி படத்தில் ஏ.ஐ. தொழிநுட்பத்தை பயன்பாடு குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு :
கூலி திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அந்த நேர்காணலில் பேசிய அவர், கூலி படத்தில் ஏ.ஐ -யை பயன்படுத்தியது குறித்து பேசியுள்ளார். அதில் லோகேஷ் கனகராஜ், ” கூலி படத்தில் பிளாஷ்பேக் காட்சி ஒன்று இருக்கும், கூலி படம் வெளியானதற்கு பிறகு நிறைய குழப்பம் உருவானது. பிளாஷ்பேக் காட்சியில் நடித்தது ரஜினிகாந்த் சார்தான், அவரை டி- ஏஜிங் பண்ணினோம்.
இதையும் படிங்க : வெளியானது பிக்பாஸ் சீசன் 9-ன் அறிவிப்பு – வைரலாகும் வீடியோ!
அதில் அவரின் குரல் இருக்கிறது அல்லவா, அது ஏஐ. ஏஐ-யை பயன்படுத்திய விஷயம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது எதுவும் கருத்து சொல்லாது இல்லையா, நம்ம என்ன சொல்கிறோமோ அதுதான் ஏஐ செய்யும்” என அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏஐ குறித்து லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ
#LokeshKanagaraj begins #Coolie post release interview🔥
“In #Coolie Flashback portion, #Rajinikanth sir only acted, we have done De-Aging for his look & used AI for his voice🌟🔥. It’s very easy to work with AI, as it will do without feedback😀” pic.twitter.com/OwOJkt3Ipi
— AmuthaBharathi (@CinemaWithAB) September 1, 2025
தமிழ் திரைப்படங்களில் ஏஐ பயன்பாடுகள்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து வருகின்றது. நடிகர்களின் வயதை குறைப்பது, அவர்களின் தோற்றம் மற்றும் குரலை மாற்றுவது, திரைப்படங்களின் பாடல்களின் பயன்படுத்துவது என ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது.
மேலும் இசையமைப்பாளர் அனிருத் கூட, தனது இசையமைப்பிற்கான ஐடியாக்களை ஏஐ-யை பயன்படுத்தியதாகவும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஹாலிவுட் படங்களை தொடர்ந்து தமிழ் மற்றும் இந்திய மொழி படங்களிலும் இந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.