Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth : தலைவர் நெக்ஸ்ட்.. கல்கி பட இயக்குநருடன் இணைகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

Rajinikanth New Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் பல படங்ககள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து, கல்கி பட இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Rajinikanth : தலைவர் நெக்ஸ்ட்.. கல்கி பட இயக்குநருடன் இணைகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் மற்றும் நாக் அஸ்வின்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 25 Aug 2025 17:10 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikath) நடிப்பில் இறுதியாக வெளியான படம் கூலி (Coolie). இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்தார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனமானது இப்படத்தை தயாரித்திருந்தது. லோகேஷ் மற்றும் ரஜினியின் கூட்டணியில் வெளியான இப்படமானது இதுவரை சுமார் ரூ 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், இந்த படத்தை அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கி வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், பிரபாஸின் கல்கி 2898ஏடி (Kalki 2898AD) மற்றும் கீர்த்தி சுரேஷின் மகாநதி (Mahanati) போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் (Nag Ashwin) இயக்கத்தில் ரஜினிகாந்த் படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இதையும் படிங்க : ராம் சரண் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு.. நடிக்க மறுத்த நடிகை!

இயக்குநர் நாக் அஷ்வினுடன் இணையும் ரஜினிகாந்த்?

இயக்குநர் நாக் அஸ்வின் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் இயக்கத்தில் இதுவரை 3 படங்கள் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. இவர் பிரபாஸின் கல்கி 2898ஏடி மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியான மகாநதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் கல்கி 2 படத்தை இயக்குவதில் தீவிரமாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : குட்டி தளபதி.. திடீர் தளபதினு சொல்லுறாங்க.. – தளபதி விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!

இந்நிலையில், இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து ஒரு கதையை கூறியிருக்கிறாராம். அது ரஜினிகாந்திற்கு பிடித்துப்போக , அந்த கதையை மேலும் டெவலப் செய்ய கூறியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இயக்குநர் நாக் அஸ்வினின் இன்ஸ்டாகிராம் பதிவு :

ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் நிலையில், இந்த படத்தை அடுத்ததாக தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் எந்த தகவல் உண்மை என்று தெரியவில்லை. விரைவில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.