RJ Balaji: எனக்கு அந்த படத்தில் நடிச்சது பெரிய அவமானமா இருந்துச்சி – ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்!
RJ Balajis Embarrassing Film : தமிழ் மக்கள் மத்தியில் நடிகராகவும், இயக்குநராகவும் பிரபலமானவராக இருப்பது ஆர்.ஜே.பாலாஜி. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில், ஒரு படத்தில் நடித்ததற்காக ரொம்பவே அவமானப்பட்டதாகவும், அதுபோன்ற முடிவை எடுத்ததற்கு கூனி குறுக்கியதாகவும் தெரிவித்துள்ளார். என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji) ஆரம்பத்தில் ரேடியோவில் ஆர்ஜே-வாக பணியாற்றிவந்தார். அதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். இவர் முதல் முதலாக நடித்த திரைப்படம் “தீயா வேலை செய்யணும் குமாரு” (Theeya Velai Seiyyanum Kumaru). இயக்குநர் சுந்தர் சி (SUndar C) இயக்கத்தில், சித்தார்த்துடன் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தின் மூலமாக சினிமாவில் துணை வேடத்தில் நடிக்க தொடங்கினார். இதை அடுத்து விஜய் சேதுபதி (Vijay Sethupathi) முதல் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) போன்ற நடிகர்களின் படங்களிலும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான LKG என்ற படத்தின் மூலம் லீட் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேஷம் என வரைந்த இயக்கத்தில் உருவாக்கிய படங்களிலும் நடித்திருந்தார்.
அடுத்து படங்களின் கதாநாயகனாகவே நடிக்க தொடங்கிய இவர், சூர்யாவை வைத்து கருப்பு (Karuppu) என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, அந்த படத்தில் தான் நடித்ததை நினைத்தாலே அவமானமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரை முதல் முறை பார்த்த தருணம்.. அவரை பார்க்கும்போது உறைந்து போய்ட்டேன் – சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்!
ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
தான் அவமான பட்ட படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்:
அந்த நேர்காணலில் ஆர்.ஜே. பாலாஜி பேசுகையில், “நான் ஒருசில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆனால் தியேட்டருகே போகமாட்டேன். ஆனால் ஒரு படம் அதில் எனது கதாபாத்திரம் பயங்கரமாக இருக்கிதுன்னு படம் ரிலீசான பிறகு கருத்துக்கள் வந்தது. அந்த படம் முழுக்க நான் இருப்பேன், பேசிட்டே இருப்பேன். நல்ல காமெடி-னு படம் பாக்குறவங்க எல்லாம் சிரிப்பான், ஆனால் எனக்கு அப்படியெல்லாம் இல்ல. சரினு நான் எனக்கு தெரிஞ்சவங்கள அந்த படம் பார்க்கிறதுக்கு தியேட்டருக்கு கூட்டிட்டுபோனேன்.
இதையும் படிங்க: பள்ளியில் காதலித்தவர்களை தேடிச் செல்லும் நாயகன், நாயகி – ஓடிடியில் வெளியாகி உள்ள வித் லவ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அப்போது படம் முடித்துவிட்டு எல்லாரும் என்னிடம் சூப்பர் என ரிவ்யூ சொல்லுவாங்கனு ஆர்வமாக இருந்தேன். படமும் முடிஞ்சிது, நான் என்னை எல்லாரும் பாராட்டப்போகிறார்கள் என தியேட்டர் வாசலில் நிற்கிறேன். என்னை பார்த்த எல்லாருமே, ஒரு இறப்பு வீட்டில் கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கும்ல, இப்படி ஆயிடுச்சேன்னு. அந்த மாதிரி எல்லாருமே பண்ணாங்க. எனக்கு அது பெரிய அவமானமாக இருந்தது, கூனி குறுகி போட்டேன் நான்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.