AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ஒன்ஸ் மோர் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Once More movie theatre release update out now | தமிழ் சினிமாவில் முன்னதாக உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஒன்ஸ் மோர். இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ஒன்ஸ் மோர் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஒன்ஸ் மோர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Aug 2026 18:24 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் முன்னதாக உருவாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஒன்ஸ் மோர். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் உடன் சோனா ஒலிக்கல் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முன்னதாகவே முடிவடைந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் வெளியீடு ஏதோ காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ஒன்ஸ் மோர் படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் வருகின்ற 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜேசன் சஞ்சய்க்கு பிடித்த திரைப்படங்கள் இதுவா? முதல்வர் விஜய் நடித்த படங்கள் இருக்கா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் டியூரேஷன் கம்மியா இருந்துருக்கலாம் நினைக்கிறீங்களா? இயக்குநர் எச்.வினோத் விளக்கம்

Follow Us