AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் டியூரேஷன் கம்மியா இருந்துருக்கலாம் நினைக்கிறீங்களா? இயக்குநர் எச்.வினோத் விளக்கம்

Jana Nayagan Movie Duration Time | தமிழ் சினிமாவில் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் ஜன நாயகன் படத்தின் டியூரேசன் குறித்து இயக்குநர் எச்.வினோத் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் டியூரேஷன் கம்மியா இருந்துருக்கலாம் நினைக்கிறீங்களா? இயக்குநர் எச்.வினோத் விளக்கம்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Aug 2026 20:22 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஜன நாயகன். தளபதி விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படம் தான் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை இயக்குநர் எச். வினோத் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் படத்தின் சென்சார் பிரச்சனை ஒரு பக்கம் முடிவுக்கு வந்தது என்றாலும் ஏ சான்றிதழ் கிடைத்ததால் குழந்தைகள் இந்தப் படத்தை பார்க்க முடியாமல் போனதால் வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தாலும் ஏ சான்றிதழால் வசூலில் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் படத்தின் ரன்னிங் டைம் குறித்து இயக்குநர் எச் வினோத் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் டியூரேஷன் கம்மியா இருந்துருக்கலாம் நினைக்கிறீங்களா?

ஜன நாயகன் படத்தின் கால அளவு 3 மணி நேரமாக உள்ளது. இதை இன்னும் சுருக்கியிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் எச். வினோத், கதைக்கு அந்த கால அளவு உண்மையாகவே தேவைப்பட்டதால் தான் அதை அப்படியே வைத்தோம். எனக்குக் கிடைத்த பெரும்பாலான கருத்துகளின்படி, படம் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதால், மூன்று மணி நேரம் ஓடுவது கூட பார்வையாளர்களுக்குத் தெரிவதில்லை. மக்கள் இதை ஒரு சுவாரஸ்யமான திரையனுபவமாகவே பார்க்கிறார்கள். படத்தின் கால அளவு அதிகமாக இருக்கிறது என்பது போன்ற பெரிய விமர்சனங்கள் எதையும் நான் இதுவரை எதிர்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Also Read… மீண்டும் சீரியலியல் களமிறங்கும் கேப்ரியெல்லா.. அட அந்த ஹீரோவுக்கு ஜோடியாகவா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Jason Sanjay: என் அம்மா ஒரு ஸ்பை மாதிரி.. நான் காணவில்லை-னு போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டாங்க – ஜேசன் சஞ்சய்!

Follow Us