Jason Sanjay: என் அம்மா ஒரு ஸ்பை மாதிரி.. நான் காணவில்லை-னு போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டாங்க – ஜேசன் சஞ்சய்!
Jason Sanjay About His Mom Sangeetha: இளம் இயக்குநராக தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருப்பவர் ஜேசன் சஞ்சய். இவரின் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள படம் சிக்மா. அண்மையில் இன்டெர்வியூ ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது அம்மாவும், தனக்கும் நடந்த நகைச்சுவையான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் (CM Vijay) மூத்த மகன்தான் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவர் தனது தந்தை சினிமாவில் சாதித்து, பின் தற்போது அரசியலில் சிறப்பாக பணியாற்றிவருகிறார். இவரின் மகனான ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் இயக்குநராக நுழைந்துள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழில் முதல் முதலாக உருவாகியுள்ள படம்தான் சிக்மா (Sigma). இதில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக பணியாற்ற அவருடன், ஹீரோவாக நடிகை சந்தீப் கிஷன் (Sundeep Kishan) நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் நடிகை ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் (Thaman S) இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் உருவாகியுள்ளது. அந்த வகையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது அம்மா சங்கீதா (Sangeetha) , தான் காணவில்லை என போலீசில் புகார் கொடுத்த சம்பவம் குறித்து நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: ஒருவாட்டி சான்ஸ் மிஸ் ஆகிட்டு.. சூர்யாவுடன் நடித்தது குறித்து பகிர்ந்த மமிதா பைஜூ!
தனது அம்மா மற்றும் தான் கணவில்லை என போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் குறித்து பகிர்ந்த ஜேசன் சஞ்சய்:
அந்த பேட்டியில் பேசிய ஜேசன் சஞ்சய், “என் அம்மா ஒரு ஸ்பை மாதிரி, நான் ஏமாற்றி தனியாக வெளியே சுற்ற முயற்சிக்கும் போதெல்லாம் மாட்டிக்கொள்வேன். ஒருமுறை, என் குடும்பத்தினர் அனைவரும் இரவு தூங்கியிருந்தபோது, நான் அவர்களுக்கு சொல்லாமல், இரவில் காரை ஓட்டிச் சென்று காலையில் திரும்பி வந்தேன். என் கைபேசி ஆப் செய்திருந்தேன். நான் காணவில்லை என்று அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருந்தார்கள். நான் காலையில் திரும்பி வந்தபோது, என்ன வச்சு செஞ்சிட்டாங்க” என அதில் நகைச்சுவையாக பேசியிருந்தார்.
இதையும் படிங்க: உங்களுக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்? செய்தியாளரை சாடிய அனுபமா பரமேஸ்வரன்!
தனது அம்மா சங்கீதா குறித்து நகைச்சுவையாக ஜேசன் சஞ்சய் பகிர்ந்த விஷயம் தொடர்பான எக்ஸ் பதிவு:
#JasonSanjay:
“My Mom is like a spy, whenever I try to cheat and hang out seperately i will get caught😅. There is one incident, when everyone of my family was slept at night, I drove the car at night without informing them & returned back on morning. My mobile phone was switched… pic.twitter.com/wt2950lWwG— AmuthaBharathi (@CinemaWithAB) August 2, 2026
ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில் சிக்மா படமானது வெளியாகி காத்திருக்கிறது. இந்த படம் வெளியாகிய பிறகு ஜேசன் சஞ்சய் இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் படங்களில் பணியாற்றவுள்ளாராம். அதை சிக்மா படத்தின் வெளியீட்டிற்கு பிறகே அவர் அதை முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.