AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jason Sanjay: அந்த ஆக்ஷன் திரைப்படம் எனக்கு உண்மையிலே பிடிக்கும் – ஜேசன் சஞ்சய்!

Jason Sanjays favorite Action Movie: தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனாகவும், தற்போது சினிமாவில் இளம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளவர் ஜேசன் சஞ்சய். இவரின் இயக்கத்தில் சிக்மா என்ற படமானது வெளியாக தயாராகியுள்ளது. இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், தனக்கு மிகவும் பிடித்த ஆக்ஷன் படம் குறித்து தெரிவித்துள்ளார்.

Jason Sanjay: அந்த ஆக்ஷன் திரைப்படம் எனக்கு உண்மையிலே பிடிக்கும் – ஜேசன் சஞ்சய்!
ஜேசன் சஞ்சய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Aug 2026 17:30 PM IST

இளம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ரசிகர்களை கவர்ந்துவருபவர் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள முதல் திரைப்படம்தான் சிக்மா (Sigma). இதை ஜேசன் சஞ்சய் இயக்க, லைகா நிறுவனத்தின் கீழ் சுபாஷ் பாஸ்கரன் தயாரித்துவருகிறார். இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ சந்தீப் கிஷன் (Sundeep Kishan) மற்றும் நடிகை ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) என இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது சிக்மா படமானது சிறப்பான கதைகளத்தல் உருவாக்கப்பட்ட நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வெளியாகவுள்ளது.

அதை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளது. அண்மையில், இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார். அதில் அவர் தனக்கு பிடித்த ஆக்ஷ்ன் படங்கள் (Favorite action movies) மற்றும் எதற்காக பிடித்தது என்பது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 48 படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்

தனக்கு பிடித்த ஆக்ஷன் படம் குறித்து ஜேசன் சஞ்சய் பேசிய விஷயம்:

அந்த பேட்டியில் பேசியிருந்த ஜேசன் சஞ்சய், “எனக்கு KGF மிகவும் பிடித்திருக்கிறது. இது நாம் அங்கம் வகிக்காத ஒரு வரலாற்றுப் பின்னணியில் அமைந்த ஒரு கற்பனை உலகம். சண்டைக் காட்சிகள் மிகவும் நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டிருந்தது. இப்படம் எல்லாவற்றையும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் முன்வைக்கிறது, மேலும் அதன் கதைக்கு மிகவும் உண்மையாக இருக்கிறது” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கார்த்தியின் 30வது படத்தில் இசையமைப்பாளராக இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத் – வெளியான அறிவிப்பு!

மேலும் தனக்கு பிடித்த காதல் படம் திருச்சிற்றம்பலம், பேமிலி டிராமா திரைப்படம் என்றால் பஞ்சதந்திரம், பிடித்த இசையை கொண்ட படம் என்றால் மூன்று பேர் மூன்று காதல் என அதில் அவர் விவரமாக தெரிவித்திருந்தார்.

சிக்மா திரைப்படத்தின் பாடல் குறித்து ஜேசன் சஞ்சய் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

சிக்மா படமானது சிறப்பான ஆக்ஷன் மற்றும் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், முதல் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படம் வரும் 20267ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில், அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us