விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 48 படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்
Suriya 48 is currently being filmed in Chennai | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 48 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்னதாக சில ஆண்டுகளாக நடிகர் சூர்யா நடிப்பில் மிகவும் கடின உழைப்பில் உருவாகும் படங்கள் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இது படக்குழு மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகர் சூர்யாவிற்கு வெற்றி முகமாகவே உள்ளது என்று கூறலாம். அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு முதலாவதாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் சூர்யாவின் 46-வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் அந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 48-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 48 படத்தின் ஷூட்டிங்:
இந்த நிலையில் சூர்யா 48 படத்தினை இயக்குநர் டிஜே ஞானவேல் எழுதி இயக்கி வருகிறார். இவர் இரண்டாவது முறையாக நடிகர் சூர்யா உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை கயாடு லோஹர் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையின் எழும்பூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. சூர்யா மற்றும் காயடு லோஹர் ஆகியோர் இடம்பெறும் காட்சிகளைப் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். ஹோம்பலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில், சூர்யா ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… என் அப்பாகிட்ட யுவன் சாருக்கு போட்டோ அனுப்ப சொல்லுவேன் – ஜேசன் சஞ்சய் சொன்ன விசயம் சுவாரஸ்ய சம்பவம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Director #TJGnanavel‘s #Suriya48 is currently being filmed in Egmore, Chennai. The team is shooting scenes featuring #Suriya and #KayaduLohar.
The film is produced by Hombale Films, with music composed by #SaiAbhyankkar. Based on real-life incidents, the film stars Suriya in the… pic.twitter.com/2KSteKXxGR
— Movie Tamil (@_MovieTamil) July 31, 2026
Also Read… நானியின் தி பாரடைஸ் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ