AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ப்ரீ புரடெக்‌ஷனில் தீவிரம் காட்டும் மாவீரன் 2 படக்குழு? வைரலாகும் தகவல்

Maaveeran 2 movie pre-production update | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் மாவீரன் 2. இந்தப் படத்தின் ப்ரீ புரடெக்‌ஷன் பணிகள் தொடங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தற்போது தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

ப்ரீ புரடெக்‌ஷனில் தீவிரம் காட்டும் மாவீரன் 2 படக்குழு? வைரலாகும் தகவல்
மாவீரன் படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jul 2026 08:09 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு படம் வெளியான பிறகு அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பெரும் பொருட்செலவில் உருவான இந்த பராசக்தி படம் எதிர்பார்த்த அளவில் வசூலைப் பெறவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலானது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பார் என்ற பல கேள்விகள் கோலிவுட் வட்டாரத்தில் சுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படியான நிலையில் தான் நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார் நடிகர் சிவகார்த்திகேயன். சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் இந்த 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ப்ரீ புரடெக்‌ஷனில் தீவிரம் காட்டும் மாவீரன் 2 படக்குழு?

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் ‘மாவீரன் 2’ படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் கதை தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. சேயோன் படப்பிடிப்பு முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் இந்தக் கதையைக் கேட்கவிருப்பதாகத் தெரிகிறது. படத்தின் மையக்கருவும் கதைக்களமும் அவருக்குப் பிடித்திருந்தால், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்திலேயே இது தான் முதல் முறையாக உருவாகும் இரண்டாம் பாகம் (sequel) கொண்ட திரைப்படமாக அமையும். இதுமட்டுமின்றி, இயக்குனர் மடோன் அஸ்வினிடம் சிவகார்த்திகேயனுக்கான மற்றொரு புதிய கதைக்களமும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா இப்படிதான் இருப்பார் – இயக்குநர் வெங்கி அட்லூரி

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சமூகவலைதளத்தில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அலாக்கா லோவா பாடல்

Follow Us