AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Magudam: விஷாலின் மகுடம் திரைப்படத்திலிருந்து ‘கலங்காதே’ பாடல் வெளியானது!

Kalangathey Lyrical Video: நடிகர் விஷால் இயக்குநராக இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம்தான் மகுடம். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், கலங்காதே என்ற 3வது பாடல் வெளியாகியுள்ளது. இதை ஜி.வி.பிரகாஷ் தனது குரலில் பாடியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Magudam: விஷாலின் மகுடம் திரைப்படத்திலிருந்து ‘கலங்காதே’ பாடல் வெளியானது!
கலங்காதே பாடல்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 27 Jul 2026 20:30 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவ விஷால் (Vishal). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து லீட் கதாநாயகனாக படங்களில் நடித்து அசத்திவருகிறார். இவர் நடிகராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ள நிலையியல், தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ள புது படம்தான் மகுடம் (Magudam). இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார் விஷால். ஆரம்பத்தில் இப்படத்தை இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின் சில காரணங்கள் அவர் இப்படத்திலிருந்து விலகினார். பின் இதை விஷால் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருடன் துஷாரா விஜயன் (Dushara Vijayan) மற்றும் அஞ்சலி (Anjali) போன்ற இரு நடிகைகள் நடித்தவருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு ஜூலை தொடக்கத்திலே முழுமையாக நிறைவடைந்தது.

இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதுப் பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2 பாடல்கள் வெளியாகியிருந்தது. இந்த வரிசையில், தற்போது மகுடம் படத்திலிருந்து “கலங்காதே” (Kalangaadhe) என்ற 3வது பாடல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யா சாருடன் போட்டியா? ஹாய் பட ரிலீஸ் குறித்து மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு எடவன்!

மகுடம் திரைப்படத்தின் 3வது பாடல் ரிலீஸ் குறித்து நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சூர்யாவின் படத்துடன் மோதும் மகுடம் திரைப்படம்:

விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஷால் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகும் அதே தேதியில் தி ஒன் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் வெளியாகிறது.

இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்ப்பவர்களுக்கு இப்படிதான் இருக்கும் – இயக்குநர் ஓபன் டாக்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், பேமிலி பொழுதுபோக்கு மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படங்களுடன் நயன்தாரா மற்றும் கவின் நடித்திருந்த ஹாய் படம் வெளியாகிறது. ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவில் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் மொத்தம் 3 பிரம்மாண்ட படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us