AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிடிஃஎப் வாசனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்.. கூட்டு சேர்ந்து பேசிய அவினாஷ் – ஜேசன்!

Avinash And Jason Bigg Boss: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான ஷோவாக இருந்துவருகிறது. அந்த வகையில், இன்று (03/11/2026) வெளியான 3வது ப்ரோமோவில் டிடிஃஎப் வாசனுக்கு வீட்டில் கிடைக்கும் அங்கீகாரம் குறித்தும், அவர் வின்னர் என்ற டாஸ்கில் முதலில் நின்றது குறித்தும் ஜேசன் மற்றும் அவினாஷ் இணைந்து பேசியுள்ளனர்.

டிடிஃஎப் வாசனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்.. கூட்டு சேர்ந்து பேசிய அவினாஷ் – ஜேசன்!
அவினாஷ் மற்றும் ஜேசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Nov 2026 16:16 PM IST

விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) சிறப்பாக மக்கள் மத்தியில் வரவேற்பு மற்றும் அதிக டிஆர்பி-யை அள்ளித்தரும் நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ். இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது நடைபெற்றுவரும் நிலையில், மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கென தனி வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடந்து சண்டை மற்றும் குழப்பங்கள் என இந்த நிகழ்ச்சி இருந்தது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் காமெடியாக “பிபி திருந்துங்கடா அகாடமி” என்ற டாஸ்கானது நடந்துவருகிறது. இந்நிலையில் இந்த டாஸ்க் நகைச்சுவையாக இருந்த நிலையிலும், இதில் போட்டியாளர்களுக்கு இடையே கோபம் இன்னும் தீராமல் அவ்வாறே உள்ளது. நேற்று (02/11/2026) இந்த் நிகழ்ச்சியில் டாப் 5 இடங்களுக்கு உரியவர் யாரை என்பதுபோல போட்டியாளர்கள் தங்களுக்கு முடிவு செய்யவேண்டும் என்பது போல டாஸ்க் ஒன்று நடந்தது.

அதில் அவினாஷ், ஜேசன், டிடிஃஎப் வாசன், வினோத் பாபு மற்றும் தன்யா போன்ற போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். மாற்றப் போட்டியாளர்கள் இவர்கள் இந்த இடத்திற்கு தகுதியா? என்பதுபோல விவாதங்கள் நடந்தது. இந்நிலையில் இந்த விவாதத்தில் டிடிஃஎப் வாசனுக்கு ஆதரவாக போட்டியாளர்கள் இருந்ததாக அவினாஷ் மற்றும் ஜேசன் பேசும் ப்ரோமோ வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இன்வஸ்டிகேஷன் க்ரைம் திரில்லர்.. அர்ஜுன்தாஸின் ஜான் டே படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

டிடிஃஎப் வாசனுக்கு எதிராக பேசும் அவினாஷ் மற்றும் ஜேசன்:

இந்த ப்ரோமோவில், டாப் 5 போட்டியாளர்கள் டாஸ்கில் டிடிஃஎப் வாசன் தன்னை ஒழுங்காக பேசவிடவில்லை என்றும், அவரின் அங்கீகாரம் குறித்து யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் பேசவில்லை என அவினாஷ் ஜேசனிடம் கூறியுள்ளார். உடனே ஜேசனும், தான் பேசுவது என்ன என்பது குறித்து கூட டிடிஃஎப் வாசன் கேட்கவில்லை என்றும் அவர் கூறி இருவரும் புலம்பியுள்ளனர்.

இதையும் படிங்க: இது என்ன புதுசா இருக்கு.. திருந்துங்கடா அகாடமி டாஸ்கில் வாய் தகராறில் முனியம்மாள் – டிடிஃஎப் வாசன்!

மேலும் ஜேசன் இதெல்லாம் பெரிதாக எடுக்கவேண்டாம், நான் உனக்காக இருக்கிறேன். இன்னும் போட்டியை சிறப்பாக ஆடு என அவினாஷுக்கு ஜேசன் ஆதரவு செய்வதுபோல இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் எதிரிகளாக இருந்த இருவரும் ஓன்று சேர்ந்துவிட்டார் என இணையத்தில் மக்கள் கருத்தை பகிர்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 58வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த நிகழ்ச்சியானது தற்போது 2 வாரங்களை ஒப்பிடும்போது மெதுவாகவே போகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் மாட்டுனமே இருக்கும் நிலையில், இந்த போட்டியில் கிட்டத்தட்ட 08 போட்டியாளர்களுக்கு மேல் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் உள்ளனர். ஆனால் இந்த வாரம் தீபாவளி வாரம் என்ற நிலையில், எவிக்ஷன் இருக்காது என கூறப்படுகிறது.

Follow Us