இது என்ன புதுசா இருக்கு.. திருந்துங்கடா அகாடமி டாஸ்கில் வாய் தகராறில் முனியம்மாள் – டிடிஃஎப் வாசன்!
Bigg Boss 10 Promo: தமிழில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. 9வது வாரத்தில் இருக்கும் இந்த நிலையில், பிபி திருந்துங்கடா அகாடமி டாஸ்க் நடக்கிறது. இந்த டாஸ்கின்போது முனியம்மாள் மற்றும் டிடிஃஎப் வாசன் இருவரும் வாய் தகராறில் ஈடுபடுவதுபோன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியை கடந்த சீசன் 8 முதல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது 19 வாரத்தில் வெறும் 14 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர். டைமண்ட் ஹெய்ஸ்ட் டாஸ்க் நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்றிருந்த நிலையில், அதன்பிறகு வாரம் வாரம் டீம் டாஸ்க் நடத்தப்பட்டுவருகிறது.
அந்த விதத்தில் இந்த வாரத்திற்காக பிபி திருந்துங்கடா அகாடமி டாஸ்க் நடைபெற்றுவருகிறது. இந்த டாஸ்க் தொடங்கியுள்ள நிலையில், இதில் முனியம்மாள் மற்றும் டிடிஃஎப் வாசன் இருவருக்கும் வாக்குவாதம் எழுவதுபோல காட்டப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: என்னுடன் 3 படத்தை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.. நஸ்ரியா குறித்து பேசிய சூர்யா!
பிபி திருந்துங்கடா அகாடமி டாஸ்கில் முனியம்மாள் – டிடிஃஎப் வாசன் தகராறு:
இந்த ப்ரோமோவில், இந்த அகாடமி டாஸ்கில் வினோத் பாபு மற்றும் அஸ்மிதா இருவருமே ஆசிரியர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் மாணவர்கள் மற்றும் திருடர்களாக இருக்கும் சக போட்டியாளர்களுக்கு பாடம் எடுக்கவேண்டும். அந்த விதத்தில் கோபத்தை பற்றி வினோத் பாபு பாடம் எடுத்துவந்த நிலையில், முனியம்மாள், டிடிஃஎப் வாசனை பார்த்து சும்மா சும்மா மீசையை திருக்க கூடாது.
இதையும் படிங்க: பிபி திருந்துங்கடா அகாடமி.. நகைச்சுவை டாஸ்க்குடன் பிக் பாஸ் வீடு – வைரலாகும் ப்ரோமோ!
மீசையை திருக்கினால் கோபமாக இருப்பதற்கு அர்த்தம் என்பது போல அவர் கூறியிருந்தார். உடனே எழுந்த டிடிஃஎப் வாசன், தேவையில்லாததை பேசக்கூடாது, வாயில் சனியை வைத்திருக்கும் ஜோதி மணி என முனியம்மாளை பார்த்து பேசியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 58வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த பதிவு:
#Day58 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில..
#BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/EGuiGpIbi8
— Vijay Television (@vijaytelevision) November 3, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அதனை தொடர்ந்து சிறப்பான டாஸ்க்குகளால் மக்களின் ஆர்வத்தை அதிகரித்துவருகிறார்கள். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் இந்தத் எவிக்ஷனும் இருக்காது என கூறப்படுகிறது. இந்த வாரம் தீபாவளி வாரம் என்ற நிலையில், எவிக்ஷன் இருக்காது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.