AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதா?”.. ‘TN Fact Check’ கொடுத்த விளக்கம்!!

TN Fact Check Debunks Rumors: தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில்துறை முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனத் தமிழ்நாடு அரசின் 'TN Fact Check' பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இதுபோன்ற வதடிகளுக்கும் தவறான தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கத்தையும் அளித்துள்ளது.

“தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதா?”.. ‘TN Fact Check’ கொடுத்த விளக்கம்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Nov 2026 14:36 PM IST

சென்னை, நவ.03: தமிழகத்தில் சமீபகாலமாகத் தொழிற்துறைகள் மற்றும் முதலீடுகள் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முக்கியத் தொழில்துறை முதலீடுகள் மற்றும் திட்டங்கள் யாவும் பக்கத்து மாநிலமான ஆந்திராவிற்குத் திசைமாறிச் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில தரப்பினரிடமிருந்து தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், இதுபோன்ற வதடிகளுக்கும் தவறான தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் ‘TN Fact Check’ தரப்பிலிருந்து விரிவானதொரு அதிகாரப்பூர்வ விளக்கம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்.. உரிய அனுமதியின்றி இயங்கிய 87 ரிசார்ட்டுகளை மூட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

உதிரிபாக சப்ளையர்கள் குறித்த நிலவரம்:

அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி, ஹூண்டாய் நிறுவனத்தின் வாகன உற்பத்தி மற்றும் உதிரிபாகங்களை வழங்கும் சப்ளையர் நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டில்தான் தங்களது தொழிற்சாலைகளை வெற்றிகரமாக இயக்கி வருகின்றன. குறிப்பாக, ‘ஜியோன்’ மற்றும் ‘ஈகோவா’ போன்ற பல முன்னணி கொரிய நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள ஹூண்டாய் ஆலைக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன. இதற்கிடையே, ஆந்திராவில் கியா (Kia) நிறுவனம் தனது ஆலைகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த 2017-ஆம் ஆண்டு முதலே சில உதிரிபாக நிறுவனங்கள் அங்குள்ள தேவைக்காகவும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. தற்போது கியா நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் ஆந்திராவிலும் உற்பத்தியை விரிவுபடுத்தியுள்ளனவே தவிர, தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் முழுமையாக அங்கே சென்றுவிடவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

விரிவடையும் உதிரிபாகத் துறைகள்:

தமிழகத்தில் ஏற்கனவே காலூன்றியுள்ள ஹூண்டாய் மற்றும் அதன் உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது முதலீடுகளைத் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாக அரசு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கான (EV) உதிரிபாகங்கள் மற்றும் உயர்தர வாகனங்களுக்கான ஆட்டோமேட்டிக் எலக்ட்ரானிக்ஸ் எனப்படும் மின்னணுவியல் சார்ந்த நவீன உற்பத்தித் துறைகளில் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் முதலீடுகள் மூலமாகத் தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகளும் தொழிற்துறையின் அசுர வளர்ச்சியும் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மதுரையில் ரவுடி ‘குட்டி சாக்கு’ சூர்யா கொடூரக் கொலை.. 12 மணி நேரத்தில் 5 பேரை தட்டி தூக்கிய போலீசார்!!

புதிய முதலீடுகளுக்கான வழிகாட்டுதல்கள்:

ஹூண்டாய் மற்றும் அதன் உதிரிபாக நிறுவனங்கள் தங்களது புதிய திட்டங்களையும் முதலீடுகளையும் மேலும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்காக ‘டேட்டா மற்றும் கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தொழில்துறை முதலீடுகள் அனைத்தும் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் யாவும் அடிப்படையற்றவை என்றும், தமிழகம் தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி வகித்து வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Follow Us