VJ Siddhu: நம்ம பண்ணுற சம்பவம் காலத்துக்கும் நிலச்சு நிக்கணும்.. வி.ஜே.சித்துவின் டயங்கரம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!
Dayangaram Movie Teaser: தமிழ் சினிமா மற்றும் யூடியூப் பிரபலமாகி இருந்துவருபவர்தான் வி.ஜே.சித்து. இவர் அஸ்வத் மாரிமுத்துவின் டிராகன் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த நிலையில், தற்போது இயக்குநர் மற்றும் ஹீரோவாக புது படத்தை உருவாக்கியுள்ளார். அதுதான் டயங்கரம். தற்போது இப்படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கோலிவுட் சினிமாவில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் (Ashwath Marimuthu) இயக்கத்தில் வெளியான டிராகன் (Dragon Movie) திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் வி.ஜே.சித்து (VJ Siddhu). இவர் அதற்கு முன்பு யூடியூப் சேனல் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவரின் யூடியூப் வீடியோக்களில் நகைச்சுவை, நட்பு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பாக வெளியிட்டு மக்களை கவர்ந்துவந்தார். மேலும் அஸ்வத் இயக்கத்தில் டிராகன் திரைப்படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு நண்பனாக நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு தனது இயக்கத்தில் ஹீரோவாக இவர் அறிமுகமாகியுள்ள திரைப்படம்தான் டயங்கரம் (Dayangaram Movie).
இந்த படத்தில் வி.ஜே.சித்து ஹீரோவாக நடிக்க, பல அறிமுக நடிகர்கள் மற்றும் யூடியூப் பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இப்படத்தின் முதல் டீசர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ரூ 1200 கோடி வசூலில் இணைந்திருக்கும் ஆனால்… ஜெயிலர் 2 படம் ரூ 1000 கோடி வசூலை தாண்டாதது குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்!
வி.ஜே.சித்துவின் டயங்கரம் திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Pongal virunthuku ready aagunga prandsss…😉❤️🔥
#DayangaramPongal
Link: https://t.co/BKqvvruN0kDirected by @VJSiddhuOG
Produced by @IshariKGanesh
@IshariKGanesh @kushmithaganesh @Music_Siddhu @natty_nataraj @PradeepERagav @dineshkrishnanb @meevinn @prosathish @VickyStunt_dir @Azarchoreo @keerthivasanA @ambaninsk @kav_pandian #sushantprasad
— Vels Film International (@VelsFilmIntl) November 3, 2026
இந்த டயங்கரம் டீசரை பார்ப்பதற்கு அப்படியே கல்லூரியில் நடக்கும் ஒரு காதல் கதை மற்றும் நட்பு மற்றும் பிரச்சனைகள் தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு டிராகன் படத்தின் பாணியை போலவே தெரிகிறது. தற்போது இந்த டீசர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.
டயங்கரம் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
இயக்குனராக மற்றும் ஹீரோவாக வி.ஜே.சித்து இந்த டயங்கரம் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் அவருடன் ஹர்ஷத்கான், அஸ்வத் மாரிமுத்து, நட்டி நடராஜன், காளி வெங்கட் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் விஜே சிந்துவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: க்ரைம் திரில்லர்.. அர்ஜுன்தாஸின் ஜான் டே படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை படக்குழு, வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.