Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dayangaram: விஜே சித்துவின் ‘டயங்கரம்’ படம்.. பூஜைகளுடன் ஷூட்டிங் இன்று தொடக்கம்!

Dayangaram Movie Shooting Pooja: தமிழில் பிரபல யூடியூபரும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமாக இருந்துவருபவர் விஜே சித்து. இவர் இயக்குநராகவும், நாயகனாகவும் அறிமுகமாகவுள்ள முதல் படம்தான் டயங்கரம். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று 2025 அக்டோபர் 27ம் தேதியில் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

Dayangaram: விஜே சித்துவின் ‘டயங்கரம்’ படம்.. பூஜைகளுடன் ஷூட்டிங் இன்று தொடக்கம்!
டயங்கரம் திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Oct 2025 20:04 PM IST

தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான யூடியூபராக இருந்துவருபவர் விஜே சித்து (VJ Siddhu). இவர் யூடியூபில் விஜே சித்து விலாக்ஸ் (Vj Siddhu Vlogs) என்ற சேனலை நடத்திவருகிறார். தொடர்ந்து நண்பர்களுடன் அரட்டை மற்றும் காமெடி என பல்வேறு விஷங்களை பகிர்ந்துவருகிறார். தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் விதமாக வீடியோவை வெளியிட்டு வந்தனதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர்களின் ஒருவராக இருந்துவருகிறார். மேலும் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் (Dragon) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிலும் நுழைந்தார். நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) முன்னணி நடிப்பில் வெளியான ட்ராகன் படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இதை அடுத்ததாக இவரே படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருந்தது.

இவர் இயக்கி நடிக்கவுள்ள புதிய படத்தின் டைட்டில் டயங்கரம். இந்த படத்தில் விஜே சித்து முன்னணி நாயகனாக நடிக்கவுள்ள நிலையில், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் (Isari K Ganesh) தயாரித்துவருகிறார். இந்நிலையில் இன்று 2025 அக்டோபர் 27ம் தேதியில் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் விஜே சித்து முன்னணி நயாகனாக நடிக்க, அவருடன் நடிகர் நட்டி சுப்ரமண்யம் மற்றும் நிதின் சத்யா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: எல்லாத்துக்குமே முழு முதல் காரணம் சிவகார்த்திகேயன்தான் – ரியோ ராஜ் ஓபன் டாக்!

டயங்கரம் படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பாக படக்குழு வெளியிட்ட பதிவு :

இதையும் படிங்க: நீக் பட நாயகனின் அடுத்தப் படம் பூஜையுடன் தொடங்கியது!

இந்த திரைப்படமானது நகைச்சுவை, எமோஷனல் மற்றும் இந்த 2கே கிட்ஸ் காலத்திற்கு ஏற்றதுபோன்ற கதைக்களத்தில் தயாராகாவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் எந்த நடிகை நடிக்கிறார் என்பது குறித்து இன்னும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு மே மாதத்திற்குள் இப்படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷும் கேமியோ வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது.