நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் புதிய திரைப்படம் குறித்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஜித், அதே இயக்குநருடன் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்காலிகமாக ஏகே 64 என அழைக்கப்படும் இந்த படம், 2026 பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை தொடங்கும் என கூறப்படுகிறது.