Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் இளம் வீரர்களுடன் போட்டி.. 40 வயதை கடந்த வீரர்கள் பட்டியல்!

2026 T20 World Cup Oldest Players: 2026 டி20 உலகக் கோப்பை நாளை அதாவது 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்ல 20 அணிகள் 4 பிரிவுகளாக மோதவுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டி20 உலகக் கோப்பையில் இளம் வீரர்கள் பலர் விளையாடினாலும், அதிக வயதுடைய வீரர்கள் சிலரும் விளையாடுகின்றனர். அந்த வீரர்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Feb 2026 20:47 PM IST
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் அபிஷேக் சர்மா உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில், இந்திய அணியில் அதிக வயதுடைய வீரராக கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளார். அவருக்கு தற்போது 35 வயதாகிறது. இந்தநிலையில், 2026 டி20 உலகக் கோப்பையில் அதிக வயதுடைய அனுபவ வீரர்களின் பட்டியல் இங்கே..

1 / 6
முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் பிரெண்டன் டெய்லர் 2026 பிப்ரவரி 6ம் தேதியான இன்று 40 வயதை எட்டுகிறார். 2007 டி20 உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்த பிரெண்டன் டெய்லர், தற்போது 2026 டி20 உலகக் கோப்பையிலும் விளையாடவுள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக பிரெண்டன் டெய்லர் இதுவரை 58 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 6 அரைசதம் உள்பட 1,185 ரன்கள் எடுத்துள்ளார்.

2 / 6
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபியும், 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ளார். 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் முகமது நபிக்கு 41 வயதாகிறது. முகமது நபி ஆப்கானிஸ்தான் அணிக்காக 147 டி20 போட்டிகளில் விளையாடி 2430 ரன்களும், 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

3 / 6
தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கி, தற்போது நெதர்லாந்து அணிக்காக விளையாடி வரும் ரோலோஃப் வான் டெர் மெர்வேவுக்கு 2025ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று அவருக்கு 41 வயது நிறைவடைந்தது. இதுவரை 66 டி20 போட்டிகளில் விளையாடி 561 ரன்களை எடுத்துள்ளார்.

4 / 6
டி20 உலகக் கோப்பைக்கான இத்தாலியின் கேப்டனானார் வெய்ன் மேட்சன். டர்பனில் பிறந்த வெய்ன் மேட்சன் 2026 ஜனவரி 2 ஆம் தேதி 42 வயதாகிறது. மேட்சன் தனது வாழ்க்கையில் ஏழு டி20 போட்டிகளில் விளையாடி, 205 ரன்களை எடுத்துள்ளார். சமீபத்தில் வெய்ன் மேட்சன் அயர்லாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரான 61 ரன்களை அடித்தார்.

5 / 6
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய மிக வயதான வீரர் முகமது நதீம் ஆவார். முகமது நதீம் ஓமானைச் சேர்ந்த 43 வயதான ஆல்ரவுண்டர் ஆவார். நதீம் இதுவரை 70 டி20 போட்டிகளில் விளையாடி 805 ரன்களுடன் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். எனவே, ஓமன் அணிக்கு முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 / 6