Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்னைக்கும் விடாமுயற்சி…1- வருடத்தை கடந்த அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

1 Year Of Vidaamuyarchi: நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனியின் கூட்டணியில் வெளியான படம்தான் விடாமுயற்சி. இப்படம் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதியில் வெளியான நிலையில், இன்றுடன் வெளியாகி 1 ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் படக்குழு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

என்னைக்கும் விடாமுயற்சி…1- வருடத்தை கடந்த அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
விடாமுயர்ச்சி திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Feb 2026 14:51 PM IST

கோலிவுட் சினிமாவில் நடிகர்கவும் கார் ரேஸராகவும் பிரபலமானவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் மிக பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி (Good Bad Ugly) படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2025ம் ஆண்டில் மட்டுமே அஜித் குமாரின் நடிப்பில் இரு படங்கள் வெளியாகியிருந்தது . அதில் ஒன்றுதான் விடாமுயற்சி (Vidaamuyarchi). இப்படத்தை பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்க, அஜித் குமார் மற்றும் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் நடிகர்கள் அர்ஜுன் ஷார்ஜா, ரெஜினா, ஆரவ், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இனைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது ஹாலிவுட் படமான “பிரேக்டவுன்” (Break Down) என்ற படத்தின் தழுவலாக வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படம் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்று 2026 பிப்ரவரி 6ம் தேதியோடு இப்படம் வெளியாகி 1 வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் இது குறித்த ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: எனது படங்கள் எல்லாம் புதுமுக இயக்குநர்களோட.. தோல்வியடைந்த இயக்குநர்களுடன்தான் – சசிகுமார் பேச்சு!

விடாமுயற்சி படத்தின் ஒரு வருட நிறைவு குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு:

இந்த விடாமுயற்சி படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இப்படமானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் வெளியன் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதை பூர்த்தி செய்யாத நிலையில், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக அஜித்தின் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படமானது, சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீக்கப்பட்ட காட்சிகளுடன்.. ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் ‘தி ராஜா சாப்’.. எப்போது தெரியுமா?

இந்த விடாமுயற்சி படமானது 2025ல் அஜித் குமாருக்கு ஒரு தோல்வி படமாகவே அமைந்திருந்தது. இப்படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி பக்கத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது. இப்படத்தை தொடர்ந்து அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK64 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதன் ஷூட்டிங் வரும் 2026 பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.