Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க போவது இவரா? வைரலாகும் தகவல்

Director Magizh Thirumeni: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மகிழ் திருமேனி. இந்த நிலையில் இவர் அடுத்ததாக ஒரு முன்னணி நடிகருடன் இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்து இயக்க போவது இவரா? வைரலாகும் தகவல்
இயக்குநர் மகிழ் திருமேனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Nov 2025 15:42 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி (Director Magizh Thirumeni). இவர் முன்தினம் பார்த்தேனே என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான தடையர தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் மற்றும் விடாமுயற்சி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் மகிழ் திருமேனி இறுதியாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்றியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே படம் திரையரங்குகளில் வெளியானது.

இதன் காரணமாக ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். தொடர்ந்து படம் வெளியான போது அஜித் குமாரின் யூசுவல் கமர்ஷியல் படங்களைப் போல இல்லாமல் வித்யாசமான முறையில் இருந்ததால் ரசிகர்களுக்கு பெரிய அளவில் இந்தப் படம் மீது விருப்பம் இல்லாமல் போனது. ஆனார் சாதாரண மக்கள் படம் சிறப்பாக இருப்பதாகவே தெரிவித்தனர். தொடர்ந்து விமர்சகர்களும் படத்தின் தரம் ஹாலிவுட் அளவிற்கு இருந்தது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி கலவையான விமர்சனங்களை விடாமுயற்சிப் படம் பெற்று இருந்தாலும் வசூலில் தோல்வியை சந்திக்காமல் தப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக விஜய் சேதுபதியை இயக்கும் மகிழ் திருமேனி:

இந்த நிலையில் இயக்குநர் மகிழ் திருமேனி அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து படம் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாகவும் இதில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோலிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தினை தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்க திட்டமிட்டு வரவதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் தர்பீஸ் ராஜ்யத்தை பங்கமாக கலாய்க்கும் கானா ராஜ்யம் – கலகல புரோமோ வீடியோ

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிலம்பரசனின் அரசன் படம் குறித்து வைரலாகும் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்