Jana Nayagan: தளபதி விஜய்யின் பாடலுக்கு மவுசு குறைந்துவிட்டதா? ஹேட்டர்ஸ்க்கு யூடியூப் கொடுத்த பதில்!
Thalapathy katcheri Song Views: தமிழ் சினிமாவிலும் பிரபலமான நாயகன்தான் தளபதி விஜய். இவரின் கடைசி திரைப்படம்தான் ஜன நாயகன். இப்படத்தின் முதல் பாடல் கடந்த 2025 நவம்பர் 8ம் தேதியில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த பாடலுக்கு ஆரம்பத்தில் வியூஸ் குறைவாக இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென வியூஸ் அதிகரித்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி படமாக உருவாகிவருவதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தினை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்க, கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனமானது தயாரித்துவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், அதை தொடர்ந்து தளபதி விஜய், தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தில் தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். மேலும் மிக முக்கிய வேடங்களில் நடிகர்கள் மமிதா பைஜூ (Mamitha baiju) , பாபி தியோல், பிரியாமணி, வரலட்சுமி சரத்குமார், நரேன் போன்ற நடிகர்கள் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் மிக பிரம்மாண்ட எதிர்பார்புகள் இருந்துவருகிறது. அந்த வகையில் இப்படத்தில் முதல் பாடலான “தளபதி கச்சேரி” (Thalapathy Kacheri) என்ற பாடல் கடந்த 2025 நவம்பர் 8 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
இந்த பாடலானது வெளியான முதல் நாளில் மொத்தமாகவே 12 மில்லியன் பார்வைகளையும், 1 மில்லியன் லைக்குகளை பெற்றிருந்தது. இந்த காரணத்தினால் தளபதி விஜய்க்கு மவுசு குறைந்துவிட்டதா? என பல்வேறு ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிவந்தனர். திடீரென நேற்று 2025 நவம்பர் 11 ஆம் தேதியில் இப்பாடலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அரைமணி நேரத்திற்கு 3 முதல் 2 மில்லியன் பார்வைகளை கடந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது. இதற்கு யூடியூப் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்த பைசன் காலமாடன் – கொண்டாட்டத்தில் படக்குழு
யூடியூப் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டிருந்த பதிவு :
Delete pannitan 😂😂😂😂😂😂 pic.twitter.com/jCkZYtjiNd
— 𝐆.𝐎.𝐀.𝐓 𓃵 𝐓𝐕𝐊 (@RanjithTVKVijay) November 12, 2025
தளபதி கச்சேரி பாடலுக்கு யூடியூப் கொடுத்த விளக்கம் :
ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி வெளியாகி 3 நாட்களான நிலையில், இதுவரை மொத்தமாக சுமார் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது. இதில் நேற்று 2025 நவம்பர் 11ம் தேதியில் மட்டும் பாதிக்கும் அதிகமாக வியூஸ் ஏறிய நிலையில், இது குறித்து அஜித் ரசிகர் ஒருவர் யூடியூப்பை டாக் செய்து எப்படி ஒரே நாளில், அதுவும் அரை மணி நேரத்தில் 3 மில்லியன் முதல் 4 மில்லியன் பார்வைகள் ஏறும் என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு யூடியூப் சார்பில் பதிலளிக்கப்பட்டிருந்த நிலையில், யூடியூப் பார்வைகள் ஆர்கானிக்கானதா? அல்லது வேறு எப்படி பட்ட பார்வைகள் என ஆராய்ந்து பின் வியூஸ் அப்டேட் செய்யப்படும்.
இதையும் படிங்க: இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கருப்பு… விரைவில் வெளியாகும் ரீலீஸ் அப்டேட்!
அதன் காரணமாகத்தான் திடீரென வியூஸ் எறியதற்கு காரணம் என யூடியூப் விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் இந்த பாடலானாது ஸ்பாட்டிபையில் மொத்தமாக சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த பாடலை கேட்டுள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.