மலையாள திரையுலகின் மிகப்பெரிய த்ரில்லர் படங்களில் ஒன்றான , ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாவது பாகம் குறித்து பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். படத்தின் கதையானது, ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் சம்பவங்களுக்குப் பிறகு சுமார் நான்கரை ஆண்டுகள் கழித்து ஜார்ஜ்குட்டியின் வாழ்க்கையில் நடக்கும் புதிய திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.