Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மெய்யழகன் படத்தில் கமல் ஹாசன் பாடல் பாடியது இப்படிதான் – ஓபனாக பேசிய இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த்

Music Composer Govind Vasanth: கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மெய்யழகன். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் இரண்டு பாடல்களைப் பாடியுள்ள நிலையில் அதுகுறித்து இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் வெளிப்படையாக பேசியது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

மெய்யழகன் படத்தில் கமல் ஹாசன் பாடல் பாடியது இப்படிதான் – ஓபனாக பேசிய இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த்
கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Nov 2025 21:13 PM IST

இந்திய சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan). உலகத்தரம் வாய்ந்த பல டெக்னாலஜியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் கமல் ஹாசன். இதன் காரணமாகவே இவரை அனைவரும் உலக நாயகன் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே எப்படி நல்ல வரவேற்பைப் பெறுகிறதோ அதே போல எந்த ஒரு படத்திலும் சின்னதாக நடிகர் கமல் ஹாசன் பங்களிப்பை அளித்து இருந்தாலும் அது தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதே போல நடிகர் கமல் ஹாசனின் குரலில் வெளியாகும் பாடல்கள் எப்போதும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் கடந்த 27-ம் தேதி செப்டம்பர் மாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மெய்யழகன். இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது போல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.  அதிலும் குறிப்பாக நடிகர் கமல் ஹாசன் பாடிய இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கமல் ஹாசன் பாடிய பாடல்கள் குறித்து கோவிந்த் வசந்த் சொன்ன விசயம்:

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் பேசிய போது, கமல்ஹாசன் சார் ‘யாரோ இவன் யாரோ’ பாடலுக்கு ஒத்திகையே பார்க்கவில்லை, நேராக ஸ்டூடியோவிற்கு வந்த உடனே பாடல் பாட தயாரானார். அவர் ஒரு குறிப்பிட்ட வரிக்கு இசையமைத்தார், கீழே சென்று பின்னர் உயர்ந்த சுருதிக்கு உயர்ந்தார். அவரால் மட்டுமே இவ்வளவு வித்தியாசத்தை பாடல்களில் உருவாக்க முடியும் என்று அந்தப் பேட்டியில் கமல் ஹாசன் குறித்து நெகிழ்ந்து பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also read… சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்

இணையத்தில் கவனம் பெறும் கோவிந்த் வசந்த் பேச்சு:

Also read… அவளும் நானும்… 9 ஆண்டுகளைக் கடந்தது அச்சம் என்பது  மடமையடா படம்!