நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு தகவல்
Bomb Threat at Ajith Kumar's House : சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மேற்கொண்ட சோதனையில் அது போலி என தெரிய வந்தது.
தலைநகர் டெல்லியில் (Delhi) செங்கோட்டை அருகே கார் ஒன்றில் வெடிகுண்டு வெடித்து, 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் காரை ஓட்டி வந்தவர் டாக்டர் முகமது உமர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது அவரது குடும்பத்தார் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வெடி குண்டு மிரட்டல் போலி என தெரிய வந்தது.
அஜித் குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்ல் மூலம் வந்த தகவலையடுத்து காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது போலியான தகவல் என தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க : அஜித் கூட அந்த படத்தில் நான் தான் நடிச்சிருக்கணும்.. நடிக்காமல் போனதுக்கு காரணம் இதுதான் – மீனா!




மேலும் நடிகர்கள் எஸ்.வி.சேகர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் போலியானது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் குறித்து சர்ச்சைக்கு விளக்கமளித்த அஜித்
நடிகர் கார் ரேஸ் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அவரது நடிப்பில் கடைசியாக கடந்த ஏப்ரல் 10, 2025 ஆம் ஆண்டு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. மீண்டும் அவர் இயக்கத்தில் புதிய படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். சமீப காலமாக அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்காத நிலையில் கார் ரேஸ் தொடர்பாக அடிக்கடி பேட்டியளித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அவர் சொன்ன கருத்து சர்ச்சையானது.
இதையும் படிக்க : அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம் படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த அவர், நான் விஜய்க்கு எப்பொழுதும் நல்லதே நினைத்திருக்கிறேன். என் கருத்து தவறான அர்த்தத்துடன் பரப்பப்படுகிறது. நடிகரான பிறகு தான் சந்திக்கும் தனிப்பட்ட வாழ்க்கை சவால்கள் குறித்துப் பேசிய அஜித், நடிகரான பின், என் விருப்பப்படி எங்கும் தனியாகச் செல்ல முடியவில்லை. என் குழந்தைகள் இருவரும் ‘அப்பா, உங்களால் ஏன் மற்ற அப்பாக்களை போல எங்களுடன் இருக்க முடியவில்லை? ஏன் பள்ளிக்கு வர முடியவில்லை?’ என்று கேட்கிறார்கள் என்று பேசினார்.