Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அது என் சின்ன வயசு கனவு… எமோஷ்னலாக பேசிய ராம் சரண்

Actor Ram Charan Emotional Speech: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் ரசிகரக்ளிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அது என் சின்ன வயசு கனவு… எமோஷ்னலாக பேசிய ராம் சரண்
ராம் சரண் மற்றும் ஏ.ஆர்.ரகுமான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Nov 2025 14:36 PM IST

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகனாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் ராம் சரண். அதன்படி கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான சிருதா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் ராம் சரண். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ராம் சரண் தொடர்ந்து தனது சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ராம் சரணை தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமாக்கிய படம் என்றால் அது மஹதீரா தான். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு தமிழில் ரசிகர்கள் அதிகம்.

அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான புரூஸ்லி தி ஃபைட்டர், ரங்கஸ்தளம், ஆர்ஆர்ஆர் ஆகியப் படங்களும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் பெடி. இந்தப் படத்தை புஜ்ஜி பாபு சனா எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து சிக்கிரி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஏ.ஆர்.ரகுமான் குறித்து எமோஷ்னலாக பேசிய நடிகர் ராம் சரண்:

இந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானின் கான்செட்டில் கலந்துகொண்ட நடிகர் ராம் சரண் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, சிக்கிரி அனைத்து மொழிகளிலும் சாதனை படைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு சிறுவயது கனவு. எனக்கு மிகவும் பிடித்த படம் பெடி என்று பேசியிருந்தார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

இணையத்தில் கவனம் பெறும் ராம் சரணின் பேச்சு:

Also Read… பராசக்தி படத்தில் இருந்து அடி அலையே பாடலின் ரிகர்சல் வீடியோ வெளியானது!