ஆரோமலே முதல் தி கேர்ள் ஃப்ரண்ட் வரை… நாளை நவம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
This Week Theatre Release: தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களின் தொகுப்பு என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
ஆரோமலே: கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் முதல் நீ முடிவும் நீ. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் கிஷன் தாஸ். நாயகனாக அறிமுகம் ஆன முதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக இவர் நாயகனாக நடிக்கும் படம் ஆரோமலே. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் ஷிவாத்மிகா ராஜசேகர், ஹர்ஷத் கான், மேகா ஆகாஷ், துளசி, விடிவி கணேஷ், நம்ரிதா எம்வி, சிபி சக்ரவர்த்தி, சந்தியா வின்ஃப்ரெட் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் நாளை 7-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரோமலே படத்தின் ட்ரெய்லர் இதோ:
அதர்ஸ்: இயக்குநர் அபிண் ஹரிஹரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் அதர்ஸ். இந்தப் படத்தில் நடிகர்கள் ஆதித்யா மாதவன், கௌரி ஜி. கிஷன், அஞ்சு குரியன், முனிஷ்காந்த் ஹரீஷ் பெராடி, நந்து ஜெகன், மாலா பார்வதி, வினோத் சாகர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை 7-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதர்ஸ் படத்தின் ட்ரெய்லர் இதோ:




தி கேர்ள்ஃப்ரண்ட்: இயக்குநர் ராகுல் ரவீந்திரன் எழுதி இயக்கிய படம் தி கேர்ள் ஃப்ரண்ட். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயாகியாக நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் தீக்ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல், ராவ் ரமேஷ், ரோகினி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் நாளை 7-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.