Kavin: ‘சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் எல்லாமே தரமாக இருக்கும்’- கவின் கொடுத்த அப்டேட்!
Kavin About Arasan Movie: தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கவின் ராஜ். இவர் வெற்றிமாறனின் தயாரிப்பில் மாஸ்க் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் கிட்டநெருக்கும் நிலையில் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. அதில் சிலம்பரசனின் அரசன் படம் குறித்த அப்டேட்டை கவின் தெரிவித்துள்ளார்.
தமிழில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் தயாரிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் மாஸ்க் (Mask). இப்படத்தில் நடிகர் கவின் ராஜ் (Kavin Raj) மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமியா (Andrea jeremiah) போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் கவின் ராஜ் கலந்துகொண்டிருந்தார். அவர் அதில் சிலம்பரசன் (Silambarasan) மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் உருவாகும் அரசன் (Arasan) திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதில் அவர், “சிலம்பரசனின் அரசன் திரைப்படம் தரமாக வரும்” என கூறியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது சிலம்பரசனின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க: 15 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷின் உத்தமபுத்திரன் – கொண்டாடும் ரசிகர்கள்
சிலம்பரசனின் அரசன் திரைப்படம் குறித்து கவின் ராஜ் சொன்ன விஷயம் :
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் கவினிடம் வெற்றிமாறனின் அரசன் படம் எப்படி? என கேள்வி கேட்டார். அதற்கு முதலில் கவின் ராஜ் , “அதை பற்றி எல்லாமே தெரியும், ஆனால் எதையும் சொல்லமாட்டேன்” என அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய கவின், “சிலம்பரசனின் அரசன் படத்தில் எல்லாமே தரமாக இருக்கும். வெற்றிமாறன் சாரின் ரசிகர்களும் சரி, சிலம்பரசன் சாரின் ரசிகர்களும் சரி மற்றும் எனது தலைவன் அனிருத் சாரின் காம்போவும் சரி இப்படத்தில் சரியாக இணைந்துள்ளது. இந்த காம்போ எல்லாமே அமைந்தது அருமையான விஷயம்.
இதையும் படிங்க: மக்கள் செல்வனுடன் புதிய படத்திற்காக இணையும் மணிரத்னம்.. நாயகி இவரா?
அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்திச் செய்யும் விதத்தில் இந்த படம் இருக்கும். மேலும் இந்த மாஸ்க் படத்தின் எடிட்டிங்கின்போது வெற்றிமாறன் சார் இந்த படத்தின் கதையை எழுதிக்கொண்டே இருந்தாரு. அவரிடம் கேட்டபோது இந்த படத்தை பற்றிய சில விஷயங்களை சொன்னாரு. மேலும் எனக்கு வெற்றிமாறன் மற்றும் சிம்பு சார்வ் இணைந்து பணியாற்றுவது ஒரு பெரிய விஷயம்தான். மேலும் இந்த காம்போ பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது. மேலும் இந்த 3 பேரின் காம்போ எப்படி வரப்போகிறது என்பதற்காக நானும் காத்திருக்கிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சிலம்பரசனின் அரசன் படம் தொடர்பான பதிவு :
Presenting the promo of #Arasan to you all 🙂#ARASANPromo – https://t.co/Jh7WCRRa4n#VetriMaaran @anirudhofficial @theVcreations #VCreations47 @prosathish @RIAZtheboss
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2025
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் படம்தான் அரசன். இப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ஏதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த காம்போ இதுவரை இணைந்திடாத நிலையில், முதல் முறையாக அரசன் படத்திற்காக இணைந்துள்ளது. மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



