Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் கவினின் கிஸ் படம் – அப்டேட் இதோ

Kiss Movie: நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கிஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடி வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் கவினின் கிஸ் படம் – அப்டேட் இதோ
கிஸ் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Oct 2025 20:39 PM IST

சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சீரியல்களில் நாயகனாகவும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் கவின். இவரது நடிப்பில் சின்னத்திரையில் வெளியான சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தொடர்ந்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெரிதாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கி வந்த நடிகர் கவின் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் கவின் தற்போது நாயகனாக கலக்கி வருகிறார். மேலும் நடிகர் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படத்தில் இருந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி நடிகர் கவின் நடிப்பில் வெளியான டாடா, ஸ்டார் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கிஸ். இந்தப் படம் ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் கிஸ் படம்:

இந்தப் படத்தை இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக வலம் வந்த இவர் இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கவின் உடன் இணைந்து நடிகர்கள் ப்ரீத்தி அஸ்ரானி, VTV கணேஷ், ஆர்ஜே விஜய், பிரபு,
ராவ் ரமேஷ், தேவயானி, சக்தி ராஜ், கௌசல்யா, மேத்யூ வர்கீஸ், கல்யாண் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடி வெளியீடு குறித்து அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி வருகின்ற நவம்பர் மாதம் 7-ம் தேதி ஜீ 5 ஓடிடியில் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… மோகன்லாலின் மகள் நாயகியாகும் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது

சதீஸ் கிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜனவரி 2026-ல் வெளியாகும் கருப்பு படம்? வைரலாகும் தகவல்