Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மை லார்ட் முதல் பூக்கி வரை… நாளை 13-ம் தேதி பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

Theatre Release Movies List Here: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப் படங்களின் வரவு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் நாளை 13-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களின் தொகுப்பு என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

மை லார்ட் முதல் பூக்கி வரை… நாளை 13-ம் தேதி பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Feb 2026 20:03 PM IST

மை லார்ட்: தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சசிகுமார். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் மை லார்ட். இந்தப் படத்தை இயக்குநர் ராஜூ முருகன் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்க்ளிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் இந்த மை லார்ட் படமும் கவனத்தை பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள இந்த மை லார்ட் படம் நாளை பிப்ரவரி மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீதா பயணம்: ஆக்‌ஷன் கிங் நடிகர் அர்ஜூன் எழுதி இயக்கி உள்ள படம் சீதா பயணம். தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் நிரஞ்சன், ஐஸ்வர்யா அர்ஜுன், அர்ஜுன், (கெஸ்ட் ரோலில்) துருவா சர்ஜா (சிறப்பு கேமியோவில்) பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, பித்திரி சதி, சரண் சிரி ஹனுமந்த், நியா, மணிசந்தனா, சௌமித்ரா, நர்ரா ஸ்ரீனு, சஹஸ்ரா, ராஜ் குமார், சஞ்சய், நாக மகேஷ், போசானி ஆகியோர் நடித்துள்ளனர். படம் நாளை பிப்ரவரி மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கா – தி ஃபாரஸ்ட்: தமிழ் சினிமாவில் மக்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகியாக வலம் வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்க் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கா தி ஃபாரஸ்ட். இந்தப் படத்தை இயக்குநர் நாஞ்சில் இயக்கி உள்ள நிலையில் நடிகை ஆண்ட்ரியா உடன் இணைந்து நடிகர்கள் சலீம் கவுஸ், கமலேஷ் மற்றும் அர்ஜுன் சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் நாளை பிப்ரவரி மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… கருப்பு படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம் – வைரலாகும் தகவல்

பூக்கி: நடிகர் அஜய் திஷான் நாயகனாக நடித்து தற்போது உருவாகி உள்ள படம் பூக்கி. இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கி உள்ள நிலையில் விஜய் ஆண்டனி படத்தை தயாரித்து படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் அஜய் திஷான் உடன் இணைந்து நடிகர்கள் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் நாளை பிப்ரவரி மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ரஜினிகாந்த் சார் என் குடும்பத்தில் ஒருதர் மாதிரி – நடிகர் சிவராஜ்குமார்