ரஜினிகாந்த் சார் என் குடும்பத்தில் ஒருதர் மாதிரி – நடிகர் சிவராஜ்குமார்
Actor Shiva Rajkumar about Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படம் உருவாகி வருகின்ற நிலையில் அந்தப் படத்தில் நடிக்கும் சிவராஜ்குமார் ரஜினிகாந்த் குறித்து பேசிய வைரலாகி வருகின்றது.
கன்னட சினிமாவில் கடந்த 1968-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் சிவராஜ் குமார். இவர் தொடர்ந்து 1974-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான ஆனந்த் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை வென்றார். அதனைத் தொடர்ந்து இவர் பல நூறு படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நிலையில் அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருந்தார்.
இந்தப் படத்தில் நடிகர் சிவராஜ் குமாரின் நடிப்பு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் சிவராஜ்குமார் காட்சிகளுக்கு மக்கள் பெரும் ஆரவாரம் அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிகர் சிவராஜ்குமார் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரஜினிகாந்த் சார் என் குடும்பத்தில் ஒருதர் மாதிரி:
அந்தப் பேட்டியில் நடிகர் சிவ ராஜ்குமார் கூறுகையில், ரஜினிகாந்த் சார் ஒரு குடும்பம் போன்றவர். ஜெயிலர் படத்தில் நரசிம்ம வேடத்தில் நடித்தது ரசிகர்களின் விருப்பமான கதாபாத்திரமாக மாறிய பிறகு, சிவராஜ்குமார் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ரஜினி சாருக்கும் எனக்கும் படப்பிடிப்பு தளத்தில் நல்ல நட்பு இருக்கும். எஸ்.ஜே. சூர்யா அடிக்கடி நகைச்சுவையாக, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், இந்த இருவரும் உறவினர்களைப் போல பேச ஆரம்பிக்கிறார்கள் என்று நகைச்சுவையாகக் கூறுவார். ஒரு வகையில், அது உண்மைதான். அவர் மெட்ராஸில் ஒரு சூப்பர் ஸ்டாராக வளர்வதைப் பார்த்து வளர்ந்தேன். அவரது மகத்தான வெற்றி இருந்தபோதிலும், அவர் மிகவும் உறுதியாக இருக்கிறார். அவர் என் தந்தையுடன் நெருங்கிய பிணைப்பைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அவர் பெங்களூருவில் இருக்கும் போதெல்லாம், எங்கள் வீட்டிற்குச் வருவதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read… தியேட்டரில் மாஸ் காட்டிய தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
இணையத்தில் கவனம் பெறும் சிவராஜ்குமார் பேச்சு:
#Rajinikanth sir is like family.
After his portrayal of Narasimha in Jailer became a fan-favorite role, #Shivarajkumar is set to reprise the same character in the highly anticipated sequel.
Rajini sir and I share a great rapport on the shooting spot. #SJSuryah often jokes,… pic.twitter.com/bzbsXCWE1X
— Movie Tamil (@_MovieTamil) February 11, 2026
Also Read… Kayadu Lohar: என்னிடம் அந்த விஷயத்தை மாற்றவேண்டும் என நினைக்கிறேன் – கயாடு லோஹர்!



