20 ஆண்டுகளைக் கடந்தது இம்சை அரசன் 23-ம் புலிகேசி… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
20 Years Of Imsai Arasan 23rd Pulikecei Movie | நகைச்சுவை நடிகர் வடிவேலு நாயகனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவ்டைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த ஜூலை மாதம் 08-ம் தேதி 2000-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்தப் படத்தை இயக்குநர் சிம்பு தேவன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் தமிழ் சினிமாவில் இந்தப் படத்தின் மூலமாக அவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஹிஸ்டாரிக்கள் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு நாயகனாக நடித்து உள்ளார். இந்தப் படம் தான் அவர் நாயகனாக நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர், இளவரசு, ஸ்ரீமன், நாகேஷ், வெண்ணிற அடை மூர்த்தி, வி.எஸ். ராகவன், மனோரமா, எம்.என்.ராஜம், மனோபாலா, தியாகு, முத்துகாளை, சிங்கமுத்து, நெல்லை சிவா, தம்பி ராமையா, பால் வின்சென்ட், கத்தரிக்கோல் மனோகர் மற்றும் நந்திதா ஜெனிபர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தினை தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் சார்பாக இயக்குநர் எஸ். சங்கர் தயாரித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் இயக்குநர் சிம்பு தேவன் மிகவும் நெகிழ்ச்சியான பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




மனதாரப் பாராட்டிய அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்:
அதன்படி இயக்குநர் சிம்பு தேவன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. மனதாரப் பாராட்டிய அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். எங்கள் திரைப்படம் இன்றும் நினைவில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஷங்கர் சண்முகம் சார், வடிவேலு சார் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எங்களை எப்போதும் பாராட்டி வரும் ஊடகத்தினருக்கு எனது சிறப்பான நன்றிகள் என்று இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் 20 ஆண்டுகள் கடந்ததற்காக பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… H Vinoth: தயாரிப்பாளராக அறிமுகமான ஜன நாயகன் பட இயக்குநர் எச்.வினோத்..!
இயக்குநர் சிம்பு தேவன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
IT’S BEEN 20 YEARS…
My humbled thanks to everyone who appreciated wholeheartedly. Happy that our film is still memorable.. My sincere thanks to @shankarshanmugh sir #Vadivelu sir and team! 🙏 My special thanks to the media, who always appreciate us. 🙏💐#20YearsOf23rdPulikeci pic.twitter.com/NDfmMsl2q4
— Chimbu Deven (@chimbu_deven) July 8, 2026
Also Read… Thaai Kizhavi: தாய் கிழவி பட 100வது நாள் கொண்டாட்டம்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!