AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அப்போ சூர்யா 50 படத்தின் இயக்குநர் நெல்சன் இல்லையா? தயாரிப்பாளர் விளக்கம்

Producer put an end to the Suriya-Nelson collaboration | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது 50-வது படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அப்போ சூர்யா 50 படத்தின் இயக்குநர் நெல்சன் இல்லையா? தயாரிப்பாளர் விளக்கம்
நடிகர் சூர்யா - இயக்குநர் நெல்சன் திலீப் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jul 2026 17:59 PM IST

தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் 46-வது படமாக தற்போது உருவாகி உள்ளது விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் பேசிய போது நிச்சயமாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் 200 சதவீதம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 47-வது படத்திற்காக இயக்குநர் ஜித்து மாதவன் உடனும் 48-வது படத்திற்காக டி.ஜே.ஞானவேல் உடனும் கூட்டணி வைத்து உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது பிசியாக நடைப்பெற்று வரும் நிலையில் சூர்யாவின் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அப்போ சூர்யா 50 படத்தின் இயக்குநர் நெல்சன் இல்லையா?

கடந்த சில நாட்களாக நடிகர் சூர்யாவின் 50-வது படத்தை எந்த இயக்குநர் இயக்க உள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வந்தது. மேலும் அந்தப் படத்தை தற்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவம் தான் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் நாக் வம்சி அளித்த பேட்டி ஒன்றில் அந்த கூட்டணி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், நெல்சன் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர்; அவருடன் நாங்கள் நிச்சயமாக ஒரு படத்தை உருவாக்குவோம். முன்பணம் செலுத்திய தருணத்திலிருந்தே, இந்தப் படம் ஜூனியர் என்.டி.ஆர்-க்காகவே (Junior NTR) திட்டமிடப்பட்டது. என்.டி.ஆரின் கால்ஷீட் தேதிகள் மற்றும் பிற பணிகளைப் பொறுத்து, இப்படம் எதிர்காலத்தில் நிச்சயம் அமையும் என்று தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா 50 படத்தை அவர் இயக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

Also Read… சூர்யா படத்துடன் மோதுகிறதா ஜன நாயகன் படம்?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Renigunta 2: சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் தம்பி!

Follow Us