AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கங்குவா படத்தின் தோல்வி… இயக்குநர் சிறுத்தை சிவா செய்த செயல்… புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர்

Producer Dhananjayan talks about Kanguva movie director Siruthai Siva | தமிழ் சினிமாவில் சூர்யாவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி தோல்வியை சந்தித்தப் படம் கங்குவா. இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கங்குவா படத்தின் தோல்வி… இயக்குநர் சிறுத்தை சிவா செய்த செயல்… புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர்
கங்குவா படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jul 2026 12:53 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவான இந்த கங்குவா படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா பேசியது மிகவும் அதிக எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. அதன்படி படம் நிச்சயாமாக 1000 கோடி இல்லை 2000 கோடிகள் வரை வசூலிக்கும் என்று அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் படத்திற்கு மொத்தமாக செலவு செய்த பட்ஜெட்டை கூட வசூலிக்கவில்லை. படு தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவை சூர்யாவின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கங்குவா படம் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம் படத்தின் பின்னணி இசை என்றும் கூறலாம். படத்தின் வசனங்களை விட அந்தப் படத்தின் பிஜிஎம் ஒலி அதிகமாக கேட்டு வசனங்கள் மக்களுக்கு புரியாமல் போனது. இது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் படத்தின் தோல்வியால் தயாரிப்பாளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்ட போது படக்குழுவினர் செய்த உதவியை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கங்குவா படத்திற்காக சம்பளத்தை விட்டுக்கொடுத்து படக்குழுவினர்:

கங்குவா படத்திற்காக, இயக்குனர் சிறுத்தை சிவாவின் சம்பளத்தில் 50% முதல் 60% வரையிலான தொகையைத் தயாரிப்பாளரால் வழங்க முடியவில்லை. படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பாளர் எதிர்கொண்ட நீதிமன்ற வழக்குகள் மற்றும் பல சிக்கல்களை இயக்குனர் நேரில் கண்டார். அதனால் அவர் அந்த நிலுவைத் தொகையைக் கேட்டு வற்புறுத்தவில்லை. அவர் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கலாம், கடிதம் எழுதியிருக்கலாம் அல்லது நீதிமன்றத்தைக்கூட நாடியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை.

படம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால் தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டதாகவே அவர் இப்போதும் கருதுகிறார். இப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று அவர் நம்பியிருந்தார். இன்னும் தரமான ஒரு படத்தை அவரால் கொடுத்திருக்க முடியும். ஆனால், கருப்பு போன்ற ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமாக இதை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அதேபோல், இசையமைப்பாளர் டிஎஸ்பியும் தனது சம்பளத்தில் 50% தொகையை விட்டுக்கொடுத்தார். நடிகர் சூர்யா இப்படத்திற்காகக் கோடிக்கணக்கான ரூபாயை இழந்ததுடன், ஒரு நடிகராக ஒன்றரை ஆண்டுகால உழைப்பையும் இதில் அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… எல்லா பெரிய விஷயங்களுக்கும் ஆரம்பம் சின்ன இடம்தான்… மாஸாக குட்டி ஸ்டோரி சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆப்பிரிக்காவில் நடக்கிறதா அனிருத்தின் திருமணம்? எப்போது தெரியுமா? – வைரலாகும் தகவல்!

Follow Us