வாட்ஸ் ஆப் DP-யை மாற்றி வலை.. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் மோசடி முயற்சி!
Raaj Kamal Films International Pass Scam: நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் முரளி கிருண்ணன் என்பவரிடம் மர்ம நபர்கள் ரூ.35.50 லட்சம் பாஸ் ஸ்கேம் மோசடி செய்ய முயற்சி செய்தனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பெரிய நிறுவனங்களை குறிவைத்து இணைய வழியில் பண மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகி செல்போன் வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றை முடக்கி அவர் போல ஆள்மாறாட்டம் செய்து நிறுவனத்தில் உள்ள மற்ற நிர்வாகிகள் மூலமாக பணத்தை மோசடி செய்யும் பாஸ் ஸ்கேம் அதிகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ் அப் மூலமாக ரூ.38.5 லட்சம் மோசடி முயற்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். இவர், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மிகவும் பிரபலம் வாய்ந்த இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மம் திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.
வாட்ஸ் ஆப் எண்ணை முடக்கிய மர்ம நபர்கள்
இந்த நிலையில், கடந்த ஜூலை 2-ஆம் தேதி ( வியாழக்கிழமை) ராஜ்கமல் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் முரளி கிருஷ்ணனின் செல்போன் எண்ணை மர்ம நபர்கள் முடக்கினர். இதைத் தொடர்ந்து, வேறொரு செல்போன் எண்ணில் இருந்து முரளி கிருஷ்ணனுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் வந்துள்ளன. இதில், ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஒருவரின் உண்மையான செல்போன் என்னை முடக்கிவிட்டு, அவரது வாட்ஸ் ஆப் முகப்பு படத்தை இந்த புதிய எண்ணில் மர்ம நபர் பயன்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: சென்னை மாநகராட்சியில் நிதி நெருக்கடி.. முடிக்கப்பட்ட பணிகளுக்கு ரூ.2,000 கோடி நிலுவை.. சொத்து வரி வசூலைத் தீவிரப்படுத்த முடிவு!




ரூ.38 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ய முயற்சி
இதன் மூலமாக தயாரிப்பாளர் பேசுவது போலவே போலியாக நடித்து அவசர தேவைக்காக ரூ.38 லட்சத்து 50 ஆயிரத்தை உடனே ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு அனுப்புமாறு முரளி கிருஷ்ணன் தெரிவித்தது போல மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த முரளி கிருஷ்ணன் இது திட்டமிட்ட மோசடி மற்றும் போலி நபர்களின் ஆள் மாறாட்டம் என்பதை உணர்ந்தார். இதனால், மர்ம நபர்கள் கேட்ட பணத்தை அவர் அனுப்பாமல் தவிர்த்து உள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையகரத்தில் முரளி கிருஷ்ணன் புகார் அளித்தார். அந்த புகாரில், வாட்ஸ் ஆப்பில் வந்த மெசேஜ்களை ஆதாரமாக இணைத்து இருந்தார். மேலும், மோசடி எண்ணை கண்டறியவும், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கை முடக்கவும் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்வது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சிவகங்கையில் 13ம் நூற்றாண்டு ‘சிங்கம் பொறித்த’ அரியவகை கல்வெட்டு கண்டெடுப்பு!