ரூ.2,000 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும்… அமைச்சர் கொடுத்த புதிய அப்டேட்!
Magalir Urimai Thogai Rs.2500 : தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.2, 500 உரிமை தொகை எப்போது வழங்கப் படும் என்பது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம் அளித்துள்ளார் .
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்திருந்தார். இந்த தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி அனைத்து தரப்பு மகளிர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி புதிய தகவல் ஒன்றை அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழாவையொட்டி கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பங்கேற்ற அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியதாவது: தமிழகத்தில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை, ரூ.2,500- ஆக உயர்த்தி வழங்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டிப்பாக ரூ.2,500 உரிமை தொகை வழங்கப்படும்.
அனைத்து மக்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை
கடந்த திமுக ஆட்சியில் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது வரை உரிமை தொகை கிடைக்கவில்லை என ஏராளமான மனுக்கள் வந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் கடந்த திமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, மகளிர் உரிமை தொகை கோரி ஒரே பெயரில் 2 முதல் 3 முறை விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உரிய ஆய்வு செய்து சரி செய்யப்படும். எனவே, தமிழகத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: போக்சோ வழக்கில் நடவடிக்கை…. ஆளுநரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு புகார்




விரைவில் மாதம்தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை
மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கூறியது போல மகளிர்களுக்கு மாதம் தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக அரசின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாதங்களுக்கு தலா ரூ.1000 வரவு வைப்பு
அதன்படி, ரூ.2,500 உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு சம்பந்தப்பட்ட மகளிர் வங்கி கணக்குக்கு தலா ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது. தற்போது, ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று அனைத்து தரப்பு மகளிர் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது. இதற்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க: சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு