AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தற்போது தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க எம்.பி மற்றும் எம்எல்ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சி.விஜயபாஸ்கர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jul 2026 15:38 PM IST

சென்னை, ஜூலை 4 : தற்போது தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க எம்.பி மற்றும் எம்எல்ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குட்கா பொருட்கள் விற்க தடைவிதிககப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த வழக்கு மீதான விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காதவர்கள் பலர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால், அவர்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என, குற்றம் சாட்டப்பட்டுள்ள சென்னை காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிக்க : “பேரம் பேசிய தவெக மீது அதிரடிப் புகார்?”.. பழிவாங்கும் நடவடிக்கை.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, குட்கா முறைகேடு வழக்கில் 278 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சில சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யபடவில்லை. பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மனுதாரருக்கு ஏற்கனவே வழங்கபட்டுவிட்டது. எனவே மனுதாரர் கோரிக்கையை நிகரகரித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த தவறும் இல்லை எனக் கூறி, முன்னாள் ஆணையர் ஜார்ஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என எம்.பி. – எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டி?.. விசிக-வின் ‘துணை முதல்வர்’ கணக்கு.. கிளம்பிய புதிய புயல்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த ஜூலை 2, 2026 அன்று தான் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். அவர் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் அவர் தவெகவில் இணைந்தது சர்ச்சையானது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us