“தவெக அரசுடன் இணைந்து செயல்படுவோம்”.. மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முதல்வரிடம் பேசுவேன்.. ஆளுநர் ஆர்லேகர் உறுதி!!
மேலும், "ஆளுநரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ உங்களுக்கு ஏதேனும் எதிர்பார்ப்புகள் இருந்தால், அதனை நீங்கள் எங்களிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம். நீங்கள் வந்து கூறினால், நாம் அனைவரும் இணைந்து கூட்டு முயற்சியாக மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்போம்" என்றும் ஆளுநர் ஆர்லேகர் தனது உரையில் உறுதியளித்தார்.
சென்னை, ஜூலை 04: மக்களின் இன்னல்களைப் போக்க, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுடன் இணைந்து ஆளுநர் மாளிகை செயல்படும் என்றும், இது தொடர்பாக முதலமைச்சர் விஜயிடம் பேசி உரிய தீர்வு காண அறிவுறுத்தப்படும் எனவும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு சிறப்பு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் மக்கள் நலம் குறித்துப் பின்வருமாறு உரையாற்றினார்.
இதையும் படிக்க: கைதில் இருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்.. ஆனால் 10 நாட்களுக்கு.. தூத்துக்குடி கோர்ட் உத்தரவு!
மக்களுக்கான புதிய உறுதிமொழி:
“நாம் அனைவரும் மக்களிடம் செல்ல வேண்டும், அவர்களின் உண்மையான பிரச்னைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுடன் நின்றுகொண்டு அவர்களின் துயரங்களுக்குத் தீர்வு காண்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்குத்தான் நாம் இன்று இங்கு கூடியுள்ளோம். இந்த நிகழ்ச்சி வெறும் புத்தக வெளியீட்டோடு முடிந்துவிடக் கூடாது. நமது சகோதர, சகோதரிகளின் துயரங்களைப் புரிந்து கொண்டு, அவர்களிடம் சென்று, அவர்கள் சமூகத்தில் முன்னேற நாம் உதவ வேண்டும் என்ற ஒரு புதிய உறுதிமொழியை நாம் அனைவரும் எடுக்க வேண்டும். இதற்காகவே இந்தத் திட்டம் ஆளுநர் மாளிகையில் நடத்தப்படுகிறது” என்றார்.
பேசி தீர்வு காண நடவடிக்கை:
மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க எந்தவித தயக்கமும் காட்டத் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் மாளிகையை நாடி வரலாம். எனது தரப்பில் இருந்து என்னென்ன சாத்தியமான உதவிகளைச் செய்ய முடியுமோ, அதை நிச்சயம் செய்வேன். “மக்களால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த அரசு, மக்களுக்காகப் பணியாற்ற விரும்புகிறது. எனவே, நான் நிச்சயம் முதலமைச்சரைத் (விஜய்) தொடர்பு கொண்டு நமது சகோதர, சகோதரிகளின் தற்போதைய அவலநிலை மற்றும் தேவைகள் என்னென்ன என்பதை எடுத்துரைப்பேன். மக்கள் நலனுக்காக இந்தந்த காரியங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை அவரிடம் வலியுறுத்துவேன்” என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: தவெக அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஆளுநர் – அரசு கூட்டு முயற்சி:
மேலும், “ஆளுநரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ உங்களுக்கு ஏதேனும் எதிர்பார்ப்புகள் இருந்தால், அதனை நீங்கள் எங்களிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம். நீங்கள் வந்து கூறினால், நாம் அனைவரும் இணைந்து கூட்டு முயற்சியாக மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்போம்” என்றும் ஆளுநர் ஆர்லேகர் தனது உரையில் உறுதியளித்தார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், ஆளுநர் ஆர்லேகர் தவெக அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும், மக்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜயிடம் கொண்டு சேர்க்கப் போவதாகவும் பேசியிருப்பது அரசியல் அரங்கில் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.