தவெக அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
MK Stalin Condemned TVK Government: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கைது விவகாரத்தில் ஆளும் அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் விஜயை அவதூறாக பேசியதாக திமுகவின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதற்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வரை அவதூறாக பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யதது டேக் டைவர்ஷன் அரசு. அவரது தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணன் எம். எல். ஏ. வை அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன. சினிமா ஆக்சன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியத்தை முதலமைச்சர் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த எம் எல் ஏ உள்ளிட்டோர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் அளித்த புகாரில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் தூய சக்தி ஆட்சி எடுக்கவில்லை.
அடுத்த கட்சி எம்எல்ஏக்களை இணைப்பது தான் மாற்றமா
எதற்காக இந்த வழக்கில் அவசரத்தை காட்டாமல் ஆளும் அரசு இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள், கொள்ளை சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆகியவற்றை தடுக்க வழி இல்லாமல் அடுத்த கட்சிகளின் எம்எல்ஏக்களை குதிரை பேரம் பேசி தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதான் முதல்வரே.
மேலும் படிக்க: கோயில் வேலைகளுக்கு லஞ்சமா?.. ஆதாரத்துடன் எனக்கு அனுப்புங்க.. அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு!




முதல்வர் நாற்காலியை தக்க வைக்க முயற்சி
அவதூறு வழக்கில் ஒருவரை கைது செய்வது என்றால் தற்போதைய ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எத்தனை பேரை கைது செய்து சிறையில் அடைப்பது. தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல், குதிரை பேரம் மூலமாக முதல்வர் நாற்காலியை தக்க வைத்து விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை கைது செய்து காலம் கடத்தி விடலாம் என முதல்வர் நினைக்கிறார். ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கான காரணம்
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அழிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனிடையே, அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மேலும் படிக்க: கரூர் சம்பவம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு.. திமுக எடுத்த திடீர் முடிவு!!