AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுகவில் தொடர் அதிரடி மாற்றம்.. புதிய செயலாளர்கள் களமிறக்கல்.. எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு!

AIADMK New Secretaries Appointing: அதிமுகவில் அமைப்பு சாரா புதிய செயலாளர் பதவிகளில் புதியவர்களை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பான விவரங்களை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதிமுகவில் தொடர் அதிரடி மாற்றம்.. புதிய செயலாளர்கள் களமிறக்கல்.. எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு!
எடப்பாடி பழனிசாமி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Jul 2026 19:11 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், கட்சியை சேர்ந்தவர்களுக்கு பதவி அளிப்பதும், ஏற்கனவே பதவி பெற்றுள்ளவர்களுக்கு அந்த பதவியை பறிப்பதும் என அதிரடி உத்தரவுகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், தற்போது அதிமுகவில் புதிய செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடசென்னை தெற்கு ( கிழக்கு) மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம். எம். கோபி என்பவர் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர் மற்றும் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர்கள், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,

அதிமுக அமைப்பு செயலாளராக நியமனம்

கட்சியின் அமைப்பு செயலாளராக எஸ். டி. கே. ஜக்கையன் முன்னாள் எம்எல்ஏ ( க. புதுப்பட்டி, தேனி மேற்கு மாவட்டம்). கட்சியின் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளராக எம். எம். கோபி ( பிச்சாண்டி லேன், ராயபுரம், வடசென்னை தெற்கு ( கிழக்கு) மாவட்டம்). கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக டி. கே. ராஜேந்திரன் ( தர்மபுரி, தர்மபுரி கிழக்கு மாவட்டம்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நெல்லையில் தந்தை- மகன் கொடூரமாக வெட்டி கொலை.. தலையை சாலையில் வீசி சென்ற கும்பல்!

அதிமுகவில் கட்சி பதவி பறிப்பு

அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி, சிவி சண்முகம் தரப்பினருக்கு இடையே உள்கட்சி மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பினரும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். மேலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்ததாக பலரின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்பட்டன. தொடர்ந்து, அவர்கள் எடப்பாடி பழனிசாமி உடன் சமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அதிமுகவில் தொடர்ந்து வருகின்றனர்.

அமைப்பு சாரா செயலாளர்கள் நியமித்து உத்தரவு

இந்த நிலையில், எஸ்பி வேலுமணி மற்றும் ரத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு கட்சியின் துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுகவில் அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர், அமைப்பு சாரா செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி பதவிகளில் புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மக்களே நோட் பண்ணுங்க.. திருநெல்வேலி மாவட்டத்தில் மின் நிறுத்தம்.. எப்போது தெரியுமா?

Follow Us